விபச்சார வழக்கில் அபச்சாரமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள்; இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: விபச்சார தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி லட்சக்கணக்கில் பணம் சேர்த்த 2 இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். கடந்த 2018 ஜனவரி மாதம் முதல் 5 மாதங்கள் விபச்சார தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றியவர்கள் சாம் வின்சென்ட், சரவணன். இவர்கள் தற்போது கீழ்பாக்கம், சைதாப்பேட்டையில் இன்ஸ்பெக்டர்களாக இருந்து வருகின்றனர்.

சென்னை: விபச்சார தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி லட்சக்கணக்கில் பணம் சேர்த்த 2 இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர்.

கடந்த 2018 ஜனவரி மாதம் முதல் 5 மாதங்கள் விபச்சார தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றியவர்கள் சாம் வின்சென்ட், சரவணன். இவர்கள் தற்போது கீழ்பாக்கம், சைதாப்பேட்டையில் இன்ஸ்பெக்டர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர்.தமிழக நிகழ்வுகள்
அகதிகள் இலங்கை செல்ல உதவிய 4 பேர் கைது

latest tamil news
ராமேஸ்வரம் : பாம்பனில் இருந்து அகதிகள் கள்ளப்படகில் இலங்கை செல்ல உதவிய கடத்தல்காரர்கள் 4 பேரை கியூ போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் தங்கியிருந்த அகதிகள் 3 பேர், நவ.,14ல் பாம்பன் முந்தல்முனை கடற்கரையில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கை சென்றனர். இதுதொடர்பாக அந்நாட்டு போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பாம்பனில் கியூ போலீசார் விசாரித்ததில், அக்காள்மடத்தைச் சாமுவேல்ராஜன் மகன் எபிராஜ் 51, அலெக்சாண்டர் மகன் தேசிங்குராஜன் 46, செங்கோல்ராஜ் மகன் சீமோன் பெரோசியஸ் 29, மரியராஜன் மகன் ஏசா 29, ஆகியோர் அகதிகளை படகில் ஏற்றி சென்றதும், இதற்காக ரூ. 80 ஆயிரம் பெற்றதும் தெரியவந்தது. இவர்களை கியூ போலீசார் கைது செய்து, நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர்.


பிரசவ அறை மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில் இரு பெண்கள் காயம்வேப்பூர் : வேப்பூர் அருகே பிரசவ அறையின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனர். மேலும், தாய் மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ரேவதி, 20; இவருக்கு நேற்று காலை 7:00 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால், நல்லுார் வட்டார அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காலை 9:30 மணியளவில் ரேவதிக்கு பிரசவ அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முருகனின் சித்தி எழில்ராணி, 38, செவிலியர்கள் மகேஸ்வரி, ஸ்ரீவதனி, உதவியாளர் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

காலை 10:30 மணியளவில் ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது பிரசவ அறையின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. அதில், முருகனின் சித்தி எழில்ராணி, 38; மருத்துவ உதவியாளர் செல்வி, 54; காயமடைந்து, நல்லுார் வட்டார அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முருகன் மனைவி செல்வி, 20; குழந்தை, செவிலியர்கள் மகேஸ்வரி, ஸ்ரீவதனி ஆகியோர் காயமின்றி தப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


latest tamil news
பைக் விபத்தில் 2 பெண்கள் பலிமதுரை : மதுரை, வலையங்குளத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் மனைவி பஞ்சு, 45; முருகேசன் மனைவி லட்சுமி, 35. இருவரும், சோளங்குருணியில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்தனர்.

நேற்று மாலையில், வேலை முடித்து, அதே கடையில் வேலை பார்க்கும் வலையங்குளம் அப்துல் ரபீக் என்பவரது 'ஹீரோ டீலக்ஸ்' டூ - வீலரில் மூவரும் வீடு திரும்பினர். 'ஹெல்மெட்' அணியவில்லை. சோளங்குருணி அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், டூ - வீலரில் மோதி நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பஞ்சு, லட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர்இழந்தனர். லேசான காயங்களுடன், அப்துல் ரபீக் தப்பினார்.


கள்ளக்காதலன் மனைவியை கொன்ற பெண்ணுக்கு ஆயுள்நாமக்கல் : கள்ளக்காதலனின் மனைவியை கொலை செய்த பெண்ணுக்கு, நாமக்கல் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி தேவராயபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி கிருஷ்ணவேணி, 34. அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சிவகுமார், 35. இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதற்கு சிவகுமாரின் மனைவி அம்பிகா, 25, இடையூறாக இருந்துள்ளார். அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்த கிருஷ்ணவேணி, 2013 செப்., 4 இரவு 8:30 மணிக்கு சிவகுமார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு தனியாக இருந்த அம்பிகாவுக்கு, டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். மயங்கி விழுந்தவரை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். எருமப்பட்டி போலீசார், கிருஷ்ணவேணியை கைது செய்தனர். வழக்கு, நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. கிருஷ்ணவேணிக்கு ஆயுள் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.


சிறுமிக்கு வன்கொடுமை; வாலிபருக்கு சாகும் வரை சிறைபுதுக்கோட்டை : விராலிமலையில், 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், பிச்சாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன், 27; கூலி தொழிலாளி. கடந்த ஜூன் 30ல், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ஒரு வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்துஉள்ளார். சிறுமியின் பெற்றோர் புகார்படி, கீரனுார் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் மாதவனை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.நீதிபதி சத்யா நேற்று அளித்த தீர்ப்பில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த மாதவனுக்கு, இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனையும், சிறுமியை தாக்கியதற்காக, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.


சிவகாசி கோடவுனில் பட்டாசு வெடித்து கட்டடம் தரைமட்டம்சிவகாசி : சிவகாசியில் பட்டாசு பேப்பர் குழாய் தயாரிக்கும் கம்பெனியையொட்டி பட்டாசு வைக்கப்பட்டிருந்த கோடவுனில் ஏற்பட்ட வெடிவிபத்தில், வீடுடன் கூடிய கட்டடம் தரைமட்டமானது. இருவர் காயமடைந்தனர். இடிபாடுகளில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் சிக்கியிருக்கலாம் என்ற தகவலால் 4 மண் அள்ளும் இயந்திரங்கள் உதவியுடன் மீட்கும் பணி நடைபெறுகிறது.

சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி காலனியில் மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ராமநாதனுக்கு 44, சொந்தமான விஜயலட்சுமி பட்டாசு பேப்பர் குழாய் தயாரிக்கும் கம்பெனி, கோடவுன், வீடு என அனைத்தும் ஒரே கட்டடத்தில் உள்ளது.இந்த 2 மாடி கட்டத்தில் தரைதளம் கோடவுன், பேப்பர் குழாய் தயாரிக்கும் இடமாகவும், மாடியில் வீடும் இருந்தது. கோடவுனில் அனுமதியின்றி பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன.நேற்று பேப்பர் குழாய் தயாரிக்கும் பணி நடந்தது. அப்பகுதியை சேர்ந்த 4 பேர் வேலை செய்தனர். கோடவுனில் அதிகளவு பட்டாசுகள் வைத்திருந்தநிலையில் தொடர்ச்சி 5ம் பக்கம்


வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடிதேனி : பொம்மையக்கவுண்டன்பட்டி பாலன்நகர் அழகுமலை. எழுமலை செல்லாயிபுரம் செல்வலிங்கம். இருவரும் உசிலம்பட்டி அரசு பஸ் டிரைவர்கள். செல்வலிங்கம், தனது மகன் ராஜ்குமாருடன் இணைந்து, அழகுமலையின் பட்டமேற்படிப்பு படித்த மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறினர்.

அதனை நம்பிய அழகுமலை பல தவணைகளில் ரூ.12 லட்சம் வழங்கினார். பின், அழகுமலை மகன் பெயரில் போலியான பணி நியமன கடிதம் வழங்கி ஏமாற்றினர். எஸ்.பி., பிரவீன் உமேஷ்டோங்ரே பரிந்துரையில் செல்வலிங்கம், அவரது மகன் ராஜ்குமார் மீது அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


கார் டிரைவர் வெட்டி கொலை; மாயமான மனைவிக்கு வலைஓசூர் : தளி அருகே, கார் டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். மாயமான அவரது மனைவியை, போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,தளி அடுத்த தேவகானப்பள்ளியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத், 33; கார் டிரைவர். இவரது மனைவி அனிதா, 28; இரு குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அச்சமயத்தில் அனிதா, போலீசாருக்கு போன் செய்வார். அப்போது, சமாதானம் செய்து வைக்க அடிக்கடி வந்த போலீஸ்காரருக்கும், அனிதாவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டிய மஞ்சுநாத், கடந்தாண்டு ஜூலை 21ல் தளி போலீஸ் ஸ்டேஷன் முன், லுங்கியில் துாக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இந்நிலையில், சானபோகனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நேற்று, மஞ்சுநாத் முகத்தில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்தார். தளி போலீசார் விசாரணையில், வேறு பகுதியில் கொலை செய்யப்பட்டு, இங்கு சடலத்தை வீசி சென்றது தெரிந்தது. மஞ்சுநாத் மனைவி அனிதா தலைமறைவாக உள்ளதால், அவருக்கும், கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை தேடி வருகின்றனர்.


விஷ வாயு கசிவு; பலி 3 ஆக உயர்வுதிருப்பூர் : திருப்பூரில் விஷவாயு தாக்கிய சம்பவத்தில், பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.

திருப்பூர் - பல்லடம் ரோடு, கொத்துக்காடு தோட்டத்தில், 'பேன்டோன் டையர்ஸ்' என்ற சாய ஆலை செயல்படுகிறது. ஆலையில் உள்ள ரசாயனங்கள் அடங்கிய கழிவு நீர் தொட்டியை நேற்று முன்தினம் சுத்தம் செய்தபோது, தொழிலாளி ராமகிருஷ்ணன், 50, விஷ வாயு தாக்கி அலறினார்.

அவரை காப்பாற்ற முயன்ற வடிவேல், 32; ஆலை மேலாளர் தினேஷ் பாண்டி, 32 ஆகியோர், விஷ வாயு தாக்கி பலியாகினர். மேலும் தொழிலாளி நாகராஜ், 48, எலக்ட்ரீஷியன் ராஜேந்திரன், 55 ஆகியோர் மயங்கினர். ராமகிருஷ்ணன் உயிர் தப்பினார்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் நேற்று அதிகாலை இறந்தார். நாகராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமி, 48 மீது, வீரபாண்டி போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் புகழேந்தி சாய ஆலையில், நேற்று ஆய்வு செய்து, 'நோட்டீஸ்' வழங்கினார். ஆலை மீது வழக்கு தொடரவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு பெற்று தரவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
16-நவ-202115:03:50 IST Report Abuse
மலரின் மகள் காவல் துறையில் கருப்பு ஆடுகள் என்று அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கும். யார் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவர்களை அறிந்த மற்ற சிலருக்கும் மட்டுமே தெரியும். யார் என்று பத்திரிகைகள் வெளியிடாது. ஏதாவது அரசு துறைகள் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவர்களை பற்றிய செய்திகளை வெளிக்கொணரும். சந்தேகத்தின் அடிப்படையில் எதையும் சொல்லி களங்கம் ஏற்படுத்தி விடக்கூடாது என்று சட்டப்பாதுகாப்பு உள்ளது போல. நெருப்பில்லாமால் புகையாது என்பது நிருபிக்கப்பட்ட பழமொழி.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
16-நவ-202112:57:21 IST Report Abuse
சீனி கமிஷனர் சைலேந்திர பாபு நிர்வாகத்தில், போலீஸ்கே ரெய்டா என்ற நிலை வந்ததற்க்கு, சிறப்பாக செயல்படும் கமிஷனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். விபச்சார தடுப்புக்கு பதில், தப்பு பண்ணவங்க கிட்ட பணம் வாங்கிட்டு, முக்காடு போட்டு ஒருத்தரு பாவமன்னிப்பு கொடுத்திருப்பரு போல இருக்கே, இன்னொருத்தரு வெந்தபுண்ணில் ஏன் வேலை பாய்ச்சனும்னு விட்டிருப்பரோ... ஹாஹாஹா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X