ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சூர்யா தம்பதிக்கு நோட்டீஸ்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சூர்யா தம்பதிக்கு 'நோட்டீஸ்'

Added : நவ 16, 2021
Share
சென்னை : 'நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லா விட்டால் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும்' என, வன்னியர் சங்கம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக, சூர்யாவை பா.ம.க.,வினரும், வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 'சூர்யாவை எட்டி உதைத்தால், 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என அறிவிக்கும் அளவுக்கு பிரச்னை
 ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சூர்யா தம்பதிக்கு 'நோட்டீஸ்'

சென்னை : 'நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லா விட்டால் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும்' என, வன்னியர் சங்கம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக, சூர்யாவை பா.ம.க.,வினரும், வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 'சூர்யாவை எட்டி உதைத்தால், 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என அறிவிக்கும் அளவுக்கு பிரச்னை பூதாகரமாகியுள்ளது.

படத்தில் வேண்டுமென்றே வன்னியரை தரக்குறைவாக காட்டிய சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என, வன்னியர்சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், 'ரசிகர்கள் வரம்பு மீறாமல்,அமைதி காக்க வேண்டும். பேச்சாகவோ அல்லது சமூக வலைதளம் வாயிலாகவோ, எந்த ஒரு எதிர்வினையும் ஆற்ற வேண்டாம்' என, சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X