பொது செய்தி

தமிழ்நாடு

வார்டு வரையறை பணி 25க்குள் முடிக்க உத்தரவு

Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை : வார்டு வரையறை தொடர்பாக இழுபறி நீடிக்கும் நிலையில், ஆணைய அதிகாரிகள் மீண்டும் நேற்று ஆலோசனை நடத்தினர்.தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான பணிகளில் மாநில தேர்தல்

சென்னை : வார்டு வரையறை தொடர்பாக இழுபறி நீடிக்கும் நிலையில், ஆணைய அதிகாரிகள் மீண்டும் நேற்று ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு வார்டு வரையறை செய்யும் பணி நடக்கிறது.

இடஒதுக்கீடு அடிப்படையில், வார்டுகளை பிரிப்பதில் இழுபறி நீடிக்கிறது. இம்மாத இறுதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிட, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்தது. வார்டு வரையறை இழுபறியால், தேர்தல் அறிவிப்பில் தாமதம் ஏற்படும் வாய்ப்புள்ளது.இப்பணிகளை விரைவுபடுத்த, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில், வார்டு வரையறை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆணையத்தின் கூட்டம், 10ம் தேதி நடந்தது. வார்டு வரையறை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டது.மழையால் பணிகள் தாமதமாவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதைஅடுத்து, வார்டு வரையறை இடஒதுக்கீடு தொடர்பாக, நேற்று மீண்டும் ஆலோசனை நடந்தது.

இதில், வார்டு வரையறை ஆணையர் பழனிகுமார், உறுப்பினர்களான, தேர்தல் ஆணைய செயலர் சுந்தரவல்லி, பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். வார்டு வரையறை தொடர்பான அனைத்து பணிகளையும், 25ம் தேதிக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X