சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரி மகன் கொலை 3 சிறுவர் உட்பட 4 பேர் கைது

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருமங்கலம்-கொளத்துார் ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் வாசு 53; அதே பகுதியில் பழக்கடை நடத்துகிறார். இவரது மகன் மகேஷ், 21; தந்தையின் பழக்கடையை கவனித்து வந்தார்.மகேஷ் கடந்த 4ம் தேதி இரவு, அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான ஹரிகிருஷ்ணன், 22, ஹரிகரன், 21, ஆகியோருடன் மது அருந்தி உள்ளார். பின், இருசக்கர வாகனங்களில் திருங்கலம் - கோயம்பேடு வழியாக மூவரும் சென்றுள்ளனர்.அப்போது,

திருமங்கலம்-கொளத்துார் ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் வாசு 53; அதே பகுதியில் பழக்கடை நடத்துகிறார். இவரது மகன் மகேஷ், 21; தந்தையின் பழக்கடையை கவனித்து வந்தார்.மகேஷ் கடந்த 4ம் தேதி இரவு, அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான ஹரிகிருஷ்ணன், 22, ஹரிகரன், 21, ஆகியோருடன் மது அருந்தி உள்ளார். பின், இருசக்கர வாகனங்களில் திருங்கலம் - கோயம்பேடு வழியாக மூவரும் சென்றுள்ளனர்.அப்போது, கோயம்பேடு அருகில், அங்கிருந்த நான்கு மர்ம நபர்களுடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதில், மகேஷை மர்ம நபர்கள் தாக்கிவிட்டு தப்பியுள்ளனர்.இதில், பலத்த காயமடைந்த மகேஷ், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மகேஷ் உயிரிழந்தார். சம்பவம் குறித்து, திருமங்கலம் போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், பழைய திருமங்கலத்தைச் சேர்ந்த, காமேஷ், 19, உட்பட மூன்று சிறுவர்கள், மகேஷை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து, நேற்று அவர்களை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X