பொது செய்தி

தமிழ்நாடு

செங்காடு கிராம மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு அதிகரிப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்--காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்காடு கிராமத்தில், 1,600க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இந்த கிராமத்தில் ஒரே தெருவைச் சேர்ந்த எட்டு பேருக்கு சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு ஏற்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர்.இதையடுத்து, இந்த கிராமத்தில் 'மக்களை தேடி மருத்துவம்'

ஸ்ரீபெரும்புதுார்--காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்காடு கிராமத்தில், 1,600க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இந்த கிராமத்தில் ஒரே தெருவைச் சேர்ந்த எட்டு பேருக்கு சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு ஏற்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர்.இதையடுத்து, இந்த கிராமத்தில் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின் வாயிலாக, செப்., 25ல் சிறப்பு முகாம் நடந்தது. 62 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், வீடு, வீடாகச் சென்று முதற்கட்டமாக 626 பேரிடம் ஆய்வு செய்தனர். இந்த பரிசோதனை முடிவுகள் அண்மையில் வெளியாகின.இதில், செங்காடு கிராமத்தைச் சேர்ந்த 40 பேருக்கு, சிறுநீரகத்தில் உப்பின் அளவு அதிகமாக இருப்பது தெரிந்தது. இதையடுத்து, இவர்கள் 40 பேரும் அடுத்த கட்ட பரிசோதனைக்கு, சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு 'ஸ்கேன்' உள்ளிட்ட சிறுநீரகம் சார்ந்த பாதிப்பை கண்டறியும் கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.இதுகுறித்து மருத்துவ அலுவலர் ஒருவர் கூறுகையில், 'இவர்களுக்கு கூடுதல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் வந்த பின், அறிகுறிகள் காணப்பட்டால், மேலும் சில பரிசோதனைகள் செய்யப்படும். அதன் பின் தான் சிறுநீரக பாதிப்பு உள்ளதா என்பது உறுதியாக தெரியவரும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X