பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.148 கோடி மானியம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை, : ரேஷன் கடைகளால் ஏற்படும் செலவினங்களை எதிர்கொள்ள, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய 148 கோடி ரூபாய் மானியத்தை விடுவித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்புதல்,கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர்கள்சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை எதிர்கொள்ள, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு, ஆண்டு தோறும், அரசு மானியம் வழங்குகிறது.இந்த
 கூட்டுறவு சங்கங்களுக்கு  ரூ.148 கோடி மானியம்

சென்னை, : ரேஷன் கடைகளால் ஏற்படும் செலவினங்களை எதிர்கொள்ள, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய 148 கோடி ரூபாய் மானியத்தை விடுவித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்புதல்,கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர்கள்சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை எதிர்கொள்ள, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு, ஆண்டு தோறும், அரசு மானியம் வழங்குகிறது.இந்த மானிய தொகை குறித்த காலத்தில் வழங்கப்படுவதில்லை.

இதனால், ரேஷன் கடைகளை நடத்துவதில், சங்கங்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. 2018 - 19ம் நிதியாண்டில், 398 கோடி ரூபாய் மானியம் வழங்க வேண்டும்.அதில், 2020 நவம்பரில்250 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. மீதி தொகை வழங்கப்படாமல் இருந்தது. நிலுவையில் உள்ள மானிய தொகையை விரைவாக வழங்குமாறு,தொழிற்சங்கங்கள்அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

தற்போது, 2018 - 19ம் ஆண்டிற்கான மானிய நிலுவை தொகை, 148 கோடி ரூபாயை விடுவித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிதி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X