சம்பவம் செய்தி

தமிழ்நாடு

30 சவரன் நகை '‛அபேஸ்' இருவருக்கு 'காப்பு'

Added : நவ 16, 2021
Share
Advertisement
பம்மல்--பம்மலில், செயின் வாங்குவது போல் நடித்து, 30 சவரன் திருடி மாயமான வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 20 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.பம்மலைச் சேர்ந்தவர் கமலேஷ் ஜெயின், 37. பம்மல் மெயின் ரோட்டில், 20 ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார். அக்., 26ம் தேதி, அடையாளம் தெரியாத ஒருவர் அடகு கடைக்கு வந்தார். தான் சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறிய அந்த நபர்,

பம்மல்--பம்மலில், செயின் வாங்குவது போல் நடித்து, 30 சவரன் திருடி மாயமான வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 20 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.பம்மலைச் சேர்ந்தவர் கமலேஷ் ஜெயின், 37. பம்மல் மெயின் ரோட்டில், 20 ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார். அக்., 26ம் தேதி, அடையாளம் தெரியாத ஒருவர் அடகு கடைக்கு வந்தார். தான் சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறிய அந்த நபர், தன்னிடம் பெரிய தொகை இருப்பதாகவும், அதற்கு செயின்கள் வேண்டும் என்றும் கூறிவிட்டுச் சென்றார். பின், 30ம் தேதி அந்த நபர், மீண்டும் கடைக்கு வந்தார். அப்போது, கமலேஷ் ஜெயின், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 30 சவரன் கொண்ட, ஆறு செயின்களை காண்பித்துள்ளார். நகைகளை காண்பித்துக் கொண்டிருந்த போது அந்த நபர் திடீரென அவற்றை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி, தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பினார்.கமலேஷ் ஜெயின் இது குறித்து, சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக விசாரித்தனர். பின், இதில் தொடர்புடைய கடலுார், புதுக்குப்பத்தைச் சேர்ந்த பிரான்ஸிஸ் சேவியர், 24, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த வினோத், 32, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 20 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள லோகேஷ் என்பவரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X