சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி 'ஆடியோ'வால் பரபரப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருமங்கலம்-வானகரத்தைச் சேர்ந்த 34 வயது பெண், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆக., மாதம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன் இரண்டாவது கணவரான கற்பககனி என்பவர், தன் 13 வயது மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.போலீஸ் நடவடிக்கை எடுக்காததால், செப்., 6ல் போலீஸ் கமிஷனர்

திருமங்கலம்-வானகரத்தைச் சேர்ந்த 34 வயது பெண், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆக., மாதம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன் இரண்டாவது கணவரான கற்பககனி என்பவர், தன் 13 வயது மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.போலீஸ் நடவடிக்கை எடுக்காததால், செப்., 6ல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதன்படி, திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரித்து, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, கற்பககனியை தேடி வருகின்றனர்.இதுவரை போலீசார் குற்றவாளியை கைது செய்யாததால், குழந்தைகள் பாதுகாப்பு 'ஹெல்ப் லைன்' எண்ணிற்கு, பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, 'என் தந்தையை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை; இதனால் மன உளைச்சலில் இருக்கிறேன்' என சிறுமி பேசியுள்ளார்.இந்த, 14 நிமிட 'ஆடியோ' நேற்று முன்தினம் முதல், சமுக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருமங்கலம் போலீசாரிடம் கேட்ட போது, தலைமறைவாக உள்ள குற்றவாளியை தேடி வருவதாகக் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X