பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி; ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை : பத்திரிகையாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப உதவி நிதியை, 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பத்திரிகை துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர், பிழை திருத்துவோர் பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு, முதல்வர் பொது
பத்திரிகையாளர், குடும்ப உதவி நிதி, அரசாணை

சென்னை : பத்திரிகையாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப உதவி நிதியை, 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பத்திரிகை துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர், பிழை திருத்துவோர் பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, குடும்ப நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், சட்டசபையில் அறிவித்தார்.

இதன்படி, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால், அவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம்; 15 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால் 3.75 லட்சம்; 10 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால் 2.50 லட்சம்.ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால் 1.25 லட்சம் ரூபாய், என, குடும்ப உதவி நிதியை உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


latest tamil news



நிதியுதவி பெற உரிய சான்றிதழ்களுடன், சம்பந்தப்பட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வழியாக, மாவட்ட கலெக்டரின் பரிந்துரை பெற்று, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும். பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுவே, இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும். அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஆணைகள் வெளியிடப்படும்.

இத்திட்டத்திற்கான செலவினங்கள், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். குடும்ப உதவி நிதி திட்டம், அரசாணை வெளியிட்ட நாளில் இருந்து அமல்படுத்தப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tc Raman - Kanchipuram,இந்தியா
16-நவ-202117:49:25 IST Report Abuse
Tc Raman அப்பட்டமான லஞ்சம். விடியல் ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தெரிவிக்காமல் இருக்க கையூட்டு.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
16-நவ-202113:31:03 IST Report Abuse
raja ஆகாகா..... அடுத்த சலுகை முன்களப்ப்சுக்கு.... இனி விடியலின் அறிவீழி செயல்கள் எல்லாம் அறிவார்ந்த செயலாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல படும்.....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
16-நவ-202113:30:08 IST Report Abuse
raja ஆகாகா..... அடுத்த சலுகை முன்களப்ப்சுக்கு.... இனி விடியலின் முட்டாள்தனங்கள் எல்லாம் அறிவார்ந்த செயலாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல படும்.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X