பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் மாநகராட்சிக்கு கமிஷனர் நியமனம் எப்போது?

Added : நவ 16, 2021
Share
Advertisement
தாம்பரம்--தாம்பரம் மாநகராட்சிக்கு கமிஷனர் நியமனம் செய்யப்படாததால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள, உள்ளாட்சி அமைப்புகளில், அடிப்படை வளர்ச்சி பணிகள், முடங்கி உள்ளன.தமிழகத்தின் தலைநகரான, சென்னைக்கு இணையாக, புறநகர் பகுதிகளிலும், மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.அரசாணைஇதற்கேற்ப, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வசதியாக, தாம்பரத்தை தலைமையிடமாக கொண்டு, மாநகராட்சியை உருவாக்க

தாம்பரம்--தாம்பரம் மாநகராட்சிக்கு கமிஷனர் நியமனம் செய்யப்படாததால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள, உள்ளாட்சி அமைப்புகளில், அடிப்படை வளர்ச்சி பணிகள், முடங்கி உள்ளன.

தமிழகத்தின் தலைநகரான, சென்னைக்கு இணையாக, புறநகர் பகுதிகளிலும், மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.அரசாணைஇதற்கேற்ப, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வசதியாக, தாம்பரத்தை தலைமையிடமாக கொண்டு, மாநகராட்சியை உருவாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள், பீர்க்கன்காரணை, பெருங்களத்துார், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், திருநீர்மலை பேரூராட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டு, கடந்த 4ம் தேதி இதற்கான அரசாணை அரசிதழில் வெளியானது.அரசாணை வெளியாகி, இரண்டு வாரங்கள் ஆன நிலையில், மாநகராட்சிக்கு கமிஷனர் நிமயனம் செய்யப்படாததால், பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இது குறித்து, மாநகராட்சி ஊழியர்கள் கூறியதாவது:புதிய மாநகராட்சி பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியானாலும், அதற்கான அரசாணை வருவதற்காக காத்திருந்தோம். அக்., 28ம் தேதி முதல், புதிதாக எந்த பணிகளிலும் ஈடுபட வேண்டாம் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.இதனால், அரசாணை வெளியான பின், தாம்பரத்தை தவிர, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மற்ற நகராட்சிகள், பேரூராட்சிகளில் வரி வசூல், புதிதாக வரி போடுவது, புதிய கட்டடங்களுக்கான வரைபட அனுமதி வழங்குவது உட்பட, முக்கிய பணிகள் நடக்காமல் உள்ளன.கடும் அவதிஅதிகாரிகளும், அலுவலர்களும் 'டம்மி' யாக இருப்பதால், அந்த உள்ளாட்சிகளில் வசிக்கும், பகுதி மக்கள் கடும் அவதியடைகின்றனர்.

இவை, அனைத்திற்கும் மாநகராட்சிக்கான கமிஷனர், நியமிக்கப்படாததே காரணம்.கமிஷனர் இன்றி, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற உள்ளாட்சிகளை வைத்து, மண்டலம், வார்டுகள் பிரிக்கும் பணிகளும், நடக்காமல் உள்ளன. எனவே, தாம்பரம் மாநகராட்சி கமிஷனரை விரைந்து நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X