பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான திட்டத்தில் புது கட்டுப்பாடு; ஒப்பந்ததாரர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'

Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை : வீட்டுவசதி வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்களில், தரத்தை தணிக்கை செய்ய புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.தமிழகத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில், பல்வேறு மாவட்டங்களில், குடியிருப்பு திட்டங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதில், வாரியம் ஆர்வம் காட்டுகிறது.முன் எப்போதும் இல்லாத வகையில், 19
கட்டுமான திட்டத்தில் புது கட்டுப்பாடு; ஒப்பந்ததாரர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'

சென்னை : வீட்டுவசதி வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்களில், தரத்தை தணிக்கை செய்ய புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில், பல்வேறு மாவட்டங்களில், குடியிருப்பு திட்டங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதில், வாரியம் ஆர்வம் காட்டுகிறது.முன் எப்போதும் இல்லாத வகையில், 19 மாடி, 20 மாடி குடியிருப்புகள் பரவலாக கட்டப்படுகின்றன. இதற்கான பணிகள், ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதில், கட்டுமான பணி தரத்தை உறுதி செய்ய, மூன்றாம் தரப்பு பொறியாளர் மேற்பார்வைக்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதற்கு அடுத்தபடியாக, கட்டுமான பணிகளின் தரத்தை மூன்றாம் தரப்பு நிறுவனத்தை அமர்த்தி, தணிக்கை செய்ய வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த முடிவுக்கு, அரசின் ஒப்புதலும் கிடைத்துள்ளது

இதையடுத்து, புதிதாக வாரிய குடியிருப்பு கட்டும்போது, மூன்றாம் தரப்பு வாயிலாக கட்டுமான பணிகள், அதற்கான தொழில்நுட்பம் ஆகியவை தணிக்கை செய்யப்படும். இதனால், தவறு செய்யும் ஒப்பந்த நிறுவனங்கள் மீது, கூடுதல் கண்காணிப்பு ஏற்படும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X