நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு: வீடுகளில் புகுந்தது மழை நீர்

Added : நவ 16, 2021
Share
Advertisement
அம்பத்துார்--ஏரிக்கான மழை நீர் போக்கு கால்வாய் மற்றும் இடுகாடு ஆக்கிரமிப்பால், வீடுகள் வெள்ளத்தில் சிக்கின.அம்பத்துார் மண்டலம் 85வது வார்டு, சாம்தாரியா நகர் வழியாக, கொரட்டூர் ஏரிக்கான 80 அடி அகல மழை நீர் போக்கு இணைப்பு கால்வாய் இருந்தது. நாளடைவில் அந்த கால்வாய் மற்றும் இடுகாடின் பெரும்பகுதி, தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் சிக்கியது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் மழையின்

அம்பத்துார்--ஏரிக்கான மழை நீர் போக்கு கால்வாய் மற்றும் இடுகாடு ஆக்கிரமிப்பால், வீடுகள் வெள்ளத்தில் சிக்கின.அம்பத்துார் மண்டலம் 85வது வார்டு, சாம்தாரியா நகர் வழியாக, கொரட்டூர் ஏரிக்கான 80 அடி அகல மழை நீர் போக்கு இணைப்பு கால்வாய் இருந்தது. நாளடைவில் அந்த கால்வாய் மற்றும் இடுகாடின் பெரும்பகுதி, தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் சிக்கியது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் மழையின் போது, சாம்தாரியா நகர் வெள்ளத்தில் சிக்கி, 2,000க்கும் அதிகமான வீடுகளில் வசிப்போர் பாதிக்கப்படுவது தொடர்கிறது.2015 மழை வெள்ளத்தால் நிலைமை மோசமாகி, சாம்தாரியா நகர் மக்கள், சென்னை கலெக்டரிடம் புகார் செய்தனர்.விசாரணையில் ஆக்கிரமிப்பு உறுதியானதால், ஆக்கிரமிப்பு செய்த தனியார் நிறுவனம், அந்த இடத்திற்கு மாற்றாக, வேறு இடம் கொடுப்பதாக தெரிவித்தது. இதை மக்கள் ஏற்காததால், கடந்த அக்., 1ம் தேதி வருவாய்த்துறையினர் அங்கு ஆய்வு செய்தனர். 'விரைவில் அறிக்கை அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.இந்நிலையில், 7ம் தேதி முதல் தொடரும் மழையால், சாம்தாரியா நகர் மட்டுமின்றி, கொரட்டூரும் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தது. எனவே, வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படுமென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X