கழிவெளியில் அடுக்குமாடி கட்டடம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருவொற்றியூர்,-கழிவெளி நிலத்தில் கட்டப்படும் 11 அடுக்குமாடி குடியிருப்புகளால், மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்படலாம் என, சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.சென்னை திருவொற்றியூரின் மேற்குப் பகுதியானது வடக்கே, மணலி விரைவு சாலை கிழக்கே, ரயில்வே தண்டவாளம் மேற்கே, பகிங்ஹாம் கால்வாய் தடுப்பு சுவர் தெற்கே, மாட்டுமந்தை மேம்பாலம் என, உயரமான எல்லைகள் நடுவே உள்ளது.இங்கு

திருவொற்றியூர்,-கழிவெளி நிலத்தில் கட்டப்படும் 11 அடுக்குமாடி குடியிருப்புகளால், மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்படலாம் என, சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.சென்னை திருவொற்றியூரின் மேற்குப் பகுதியானது வடக்கே, மணலி விரைவு சாலை கிழக்கே, ரயில்வே தண்டவாளம் மேற்கே, பகிங்ஹாம் கால்வாய் தடுப்பு சுவர் தெற்கே, மாட்டுமந்தை மேம்பாலம் என, உயரமான எல்லைகள் நடுவே உள்ளது.இங்கு அம்பேத்கர் நகர், சரஸ்வதி நகர், சிவசக்தி நகர், சக்தி கணபதி நகர், ராஜா சண்முகம் நகர், கலைஞர் நகர், சுப்ரமணியம் நகர் உட்பட, 30க்கும் மேற்பட்ட நகர்களில், 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.பெருமழை மற்றும் வெள்ளத்தின் போது, திருவொற்றியூர் மேற்கில் தேங்கும் மழை நீரானது வடிகால்கள் வழியாக பகிங்ஹாம் கால்வாயை ஒட்டிய கழிவெளி நிலத்தில் தேங்கி, இணைப்பு வடிகால்கள் வழியாக பகிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும்.நாளடைவில், கழிவெளி நிலப்பகுதி ஆக்கிரப்பில் சிக்கியது. அதன் பின், கார்கில் நகரை ஒட்டியிருந்த 15 ஏக்கரிலான கழிவெளி நிலப்பகுதியில் மழை நீர் தேங்கி வெளியேறி வந்தது.இந்த நிலப்பகுதி, 2015ல் போதுமானதாக இல்லை. இந்நிலையில், 2018ல் குடிசை மாற்று வாரியத்தால், 130 கோடி ரூபாய் செலவில், கழிவெளி நிலப்பகுதியின் கிழக்குப்புறம், 11 அடுக்குமாடி கொண்ட 1,200 வீடுகள் கட்டும் பணி துவங்கியது.ஆரம்பத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பிறகு யாரும் கண்டுகொள்ளவில்லை. விளைவு, தற்போது நான்கு பிரிவுகளாக, 1,200 வீடுகளும் கட்டி முடியும் தறுவாயில் உள்ளன.சமீபத்தில் பெய்த மழைக்கு, பகிங்ஹாம் கால்வாயில் நீர்மட்டம் உயர்வு மற்றும் மேற்கில் தேங்கி நிற்க போதுமான அளவு கழிவெளி நிலப்பரப்பு இல்லாததால், பல பகுதிகளில் மூன்று நாட்களுக்கும் மேலாக மழை நீர் வடியாமல் இருந்தது.மாநகராட்சியினர் மின் மோட்டர் மூலம் மழை நீரை பகிங்ஹாம் கால்வாய்க்கு கடத்தி, தற்போது நிலைமை ஓரளவு சீராகி உள்ளது. இருப்பினும், மீண்டும் பெருமழையால் வெள்ளம் ஏற்பட்டால், தண்ணீர் வடிய ஏதுவாக கழிவெளி நிலப்பரப்பு இல்லாததால், கடும் சிக்கல் ஏற்படலாம் என, சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.இதனால், மீதமுள்ள கழிவெளி நிலத்தில், மழை நீரை வெளியேற்ற ஏதுவாக, ராட்சத கிணறுகள் மற்றும் மின்மோட்டர்கள் அமைக்கும் திட்டம், மழை நீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X