சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வண்ணாரப்பேட்டையில் மறியல் பேருந்து முன் படுத்து போராட்டம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
வண்ணாரப்பேட்டை--வண்ணாரப்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றக் கோரி, பேருந்து முன் படுத்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை, வண்ணாரப்பேட்டையில் ராமதாஸ் நகர், காத்பாடா, லேபர் லைன் உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் லட்சகணக்கான மக்கள் வசிக்கின்றனர்.கடந்த வாரம் பெய்த கனமழையால், இப்பகுதி முழுதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வண்ணாரப்பேட்டை--வண்ணாரப்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றக் கோரி, பேருந்து முன் படுத்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை, வண்ணாரப்பேட்டையில் ராமதாஸ் நகர், காத்பாடா, லேபர் லைன் உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் லட்சகணக்கான மக்கள் வசிக்கின்றனர்.கடந்த வாரம் பெய்த கனமழையால், இப்பகுதி முழுதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது, மழை நீரில் கழிவு நீரும் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.சேறும் சகதியுமாக, இப்பகுதி நோய் தொற்று பரவும் இடமாக மாறி உள்ளது.இது குறித்து ராயபுரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.வீட்டுகுள் புகுந்துள்ள மழை நீரை அகற்ற கோரி, அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர், வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் முன், நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகர பேருந்து முன் பெண்கள் படுத்து, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் மின்ட் மேம்பாலத்தில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இரண்டு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தியை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின் அவர் பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தினார்.உடனே தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:ராமதாஸ் நகரில் வசிக்கிறோம். இங்கு மழைநீரில் கழிவு நீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தண்ணீர் போக வழியில்லை. மாற்று துணி இல்லாமல் தவித்து வருகிறோம். இப்பகுதியில் உதவி செய்ய யாரும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X