சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழை நீர் தேக்கத்தால் விரைவு சாலை சேதம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
மணலி, நவ. 16-மழை நீர் தேக்கத்தால் மணலி விரைவு சாலை பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.சென்னை, எம்.எப்.எல்., சந்திப்பு துவங்கி சாத்தாங்காடு சந்திப்பு வரையிலான, 2.5 கி.மீ., துார மணலி விரைவு சாலையில், புழல் உபரி நீர் திறப்பு காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்தது.மூன்று நாட்களாக, இச்சாலையில் தண்ணீர் ஓடியதால், தார் சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. சில

மணலி, நவ. 16-மழை நீர் தேக்கத்தால் மணலி விரைவு சாலை பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.சென்னை, எம்.எப்.எல்., சந்திப்பு துவங்கி சாத்தாங்காடு சந்திப்பு வரையிலான, 2.5 கி.மீ., துார மணலி விரைவு சாலையில், புழல் உபரி நீர் திறப்பு காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்தது.மூன்று நாட்களாக, இச்சாலையில் தண்ணீர் ஓடியதால், தார் சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. சில இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் சட்டென பீதியடைகின்றனர்.அதே போல், எம்.எப்.எல்., சந்திப்பில் இருந்து, சி.பி.சி.எல்., சந்திப்பு வரையிலான, 3 கி.மீ., துார பொன்னேரி நெடுஞ்சாலையிலும், புழல் உபரி நீர் கடந்த நான்கு நாட்களாக ஆர்ப்பரித்து ஓடியதால் பல இடங்களில், தார் சாலை பெயர்ந்து பள்ளம் மேடுமாக காட்சியளிக்கிறது.திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, எண்ணுார் விரைவு சாலைகளிலும், மழை நீர் தேக்கத்தால், ஆங்காங்கே சாலைகள் பெயர்ந்து, அலங்கோலமாக உள்ளன.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, உயிர் பலி வாங்க காத்திருக்கும் பள்ளங்களை உடனடியாக செப்பனிட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X