சடையங்குப்பம் ஏரி கலங்கல் பழுதால் தொடர்கிறது நீர் கசிவு

Added : நவ 16, 2021
Share
Advertisement
மணலி-சடையங்குப்பம் ஏரியின் கலங்கலில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக நீர் கசிவு ஏற்படுவதால், அவற்றை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை மணலி, 16வது வார்டில் சடையங்குப்பம் கிராமம் உள்ளது. ஊரின் வடக்கு பக்கம் 79 ஏக்கர் பரப்பளவு, 3.2 கி.மீ., கரைகள் கொண்ட ஓடை போல் அமைப்புடைய சடையங்குப்பம் ஏரி உள்ளது. இதில், ஒரு கோடி கன அடி தண்ணீர் தேக்க முடியும்.இந்த ஏரி நிரம்பும் பட்சத்தில்,

மணலி-சடையங்குப்பம் ஏரியின் கலங்கலில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக நீர் கசிவு ஏற்படுவதால், அவற்றை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை மணலி, 16வது வார்டில் சடையங்குப்பம் கிராமம் உள்ளது. ஊரின் வடக்கு பக்கம் 79 ஏக்கர் பரப்பளவு, 3.2 கி.மீ., கரைகள் கொண்ட ஓடை போல் அமைப்புடைய சடையங்குப்பம் ஏரி உள்ளது. இதில், ஒரு கோடி கன அடி தண்ணீர் தேக்க முடியும்.இந்த ஏரி நிரம்பும் பட்சத்தில், அருகேயுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தவிர, கால்நடைகளுக்கும் ஏரி தண்ணீர் அவசியமாக உள்ளது. ஏரியில் தண்ணீர் தேங்குவதால், சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருக்கும்.சமீபத்தில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு, ஏரி முழுதுமாக நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், ஏரிக்கு தெற்குபுறம் சடையங்குப்பம் ஊரை ஒட்டியிருக்கும் கலங்கலில் பழுது ஏற்பட்டுள்ளது.கலங்கல் கட்டி பல ஆண்டுகள் கடந்த நிலையில், சிமென்ட் பூச்சுகளில் விரிசல் ஏற்பட்டு, ஆங்காங்காங்கே நீர் கசிந்து வருகிறது. தொடர்ச்சியாக, கலங்கல் வழியாக உபரி நீர் கசிவதால், உடைப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.எனவே, கலங்கலில் ஏற்பட்டுள்ள விரிசல்களை தற்காலிகமாக சரி செய்து கொடுக்க வேண்டும். தண்ணீர் வற்றிய பின், புதிய கலங்கலை சற்று உயரமாக கட்டிக் கொடுக்க வேண்டும் என, பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதே நிலை நீடித்தால், கலங்கல் உடைப்பு ஏற்படும் என, பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X