பொது செய்தி

இந்தியா

ரயில் கட்டணம் குறைப்பு பயணியர் மகிழ்ச்சி

Added : நவ 16, 2021
Share
Advertisement
பெங்களூரு-தென்மேற்கு ரயில்வே துறையின் சார்பில் பெங்களூரு - மைசூரு இடையிலான ரயில் கட்டணம் பழைய படி குறைக்கப்பட்டுள்ளது.கொரோனாவின் தாக்கம் என்ற பெயரில், தென்மேற்கு ரயில்வே துறை, பெங்களூரு - மைசூரு இடையிலான ரயில் கட்டணத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.குறிப்பாக, சிறப்பு மற்றும் பண்டிகை கால ரயில்களுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக 145 ரூபாய் முதல் அதிகபட்சமாக 385

பெங்களூரு-தென்மேற்கு ரயில்வே துறையின் சார்பில் பெங்களூரு - மைசூரு இடையிலான ரயில் கட்டணம் பழைய படி குறைக்கப்பட்டுள்ளது.கொரோனாவின் தாக்கம் என்ற பெயரில், தென்மேற்கு ரயில்வே துறை, பெங்களூரு - மைசூரு இடையிலான ரயில் கட்டணத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.குறிப்பாக, சிறப்பு மற்றும் பண்டிகை கால ரயில்களுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக 145 ரூபாய் முதல் அதிகபட்சமாக 385 ரூபாய் வரையிலும் ஆக்கப்பட்டிருந்தது.தற்போது, கொரோனாவுக்கு முன்பிருந்தப்படி, கட்டணம் மாற்றப்பட்டுள்ளது.தென்மேற்கு ரயில்வே துறையின் சார்பில் நாள்தோறும், 42 ரயில்கள் பெங்களூரு - மைசூரு இடையில் இயக்கப்படுகிறது.கட்டணம் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டிருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, சாதாரண கட்டணம், 65 ரூபாய்க்கும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு முன் 51 ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்குவதற்கும், ரயில்நேரம் மற்றும் கட்டணம் அச்சிடப்பட்ட அட்டவணையை தென்மேற்கு ரயில்வே துறை வெளியிட வேண்டுமென பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X