பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு சாகுபடி செய்ய முடியாமல் தவிப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
பெங்களூரு-பயிர் விளைச்சல் அதிகரித்தும், பருவநிலை மாற்றத்தால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.கர்நாடகாவின் பல பகுதிகளில் தொடர் மழையும் குளிருமாக பருவநிலை உள்ளது. ஆண்டுதோறும் ஒவ்வொரு காலகட்டத்திலும், குறிப்பிட்ட பயிர் வகைகள் அந்தந்த கால மழையை எதிர்பார்த்து விவசாயிகள் பயிரிடுகின்றனர்.நடப்பாண்டில் ஜூன் முதல் அக்., வரையிலான மழையை எதிர்பார்த்து, 192

பெங்களூரு-பயிர் விளைச்சல் அதிகரித்தும், பருவநிலை மாற்றத்தால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.கர்நாடகாவின் பல பகுதிகளில் தொடர் மழையும் குளிருமாக பருவநிலை உள்ளது. ஆண்டுதோறும் ஒவ்வொரு காலகட்டத்திலும், குறிப்பிட்ட பயிர் வகைகள் அந்தந்த கால மழையை எதிர்பார்த்து விவசாயிகள் பயிரிடுகின்றனர்.நடப்பாண்டில் ஜூன் முதல் அக்., வரையிலான மழையை எதிர்பார்த்து, 192 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் கர்நாடகாவில் உணவு தானியங்கள் பயிரிடப்பட்டன.நடப்பாண்டில் 135 லட்சம் டன் விளைச்சல் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 138 லட்சம் டன்னுக்கும் அதிகமான விளைச்சல் இருக்கும் வகையில் விளைநிலங்கள் செழித்து வளர்ந்துள்ளன.கேழ்வரகு, நெல் போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. ஆனால் தொடர் மழையால் நன்றாக விளைந்தும் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து, கர்நாடகா விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:அதிக மழையால், 30 சதவீத பயிர்கள் சாகுபடி செய்ய முடியாமல் அழிந்து விட்டன. இதே சூழல் தொடர்ந்து ஒரு வாரம் நீடித்தால், பயிர் சேதம் அதிக அளவில் இருக்கும்.எந்தெந்த பயிர்கள் எவ்வளவு நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளன; அவற்றின் நிலை குறித்து அதிகாரிகள் பார்வையிட வேண்டும்.விவசாயிகளுக்கான நிவாரணத்தொகை வழங்குவதற்கும் உரிய திட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.கடந்தாண்டை விட, நடப்பாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட. அதிகமான நிலப்பரப்பில் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. விவசாயிகளில் பெரும்பான்மையோர், பயிர் காப்பீட்டு திட்டங்களில் பதிவு செய்வதில் அலட்சியமாக உள்ளனர்.இதுபோன்ற சூழல்களில், காப்பீட்டு திட்டங்களின் முக்கியத்துவம் புரிகிறது. அனைவரும் காப்பீட்டு திட்டங்களை பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X