பொது செய்தி

இந்தியா

செக் போஸ்ட்..

Added : நவ 16, 2021
Share
Advertisement
பூக்காரங்க விளையாட்டு!மேலவை தேர்தலில் பூக்காரர்களை யாரும், 'ஹைஜாக்' செய்யாதபடி கட்டுப்படுத்த பூக்கார 'மாஜி' அசம்பிளிக்காரர், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களின் கூட்டத்தை தனது பண்ணை வீட்டில் நடத்தி இருக்காரு.அதே நேரத்தில் புல்லுக்கட்டு ஆதரவாளர்களிடம், தாராளமா ரேட்டு தருவதாகவும் பேசியுள்ளாரு.வேட்பாளர் யாருன்னு முக்கியமல்ல. ஆனால் ஜெயிக்க வேண்டியது பூ சின்னமா

பூக்காரங்க விளையாட்டு!

மேலவை தேர்தலில் பூக்காரர்களை யாரும், 'ஹைஜாக்' செய்யாதபடி கட்டுப்படுத்த பூக்கார 'மாஜி' அசம்பிளிக்காரர், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களின் கூட்டத்தை தனது பண்ணை வீட்டில் நடத்தி இருக்காரு.

அதே நேரத்தில் புல்லுக்கட்டு ஆதரவாளர்களிடம், தாராளமா ரேட்டு தருவதாகவும் பேசியுள்ளாரு.

வேட்பாளர் யாருன்னு முக்கியமல்ல. ஆனால் ஜெயிக்க வேண்டியது பூ சின்னமா இருக்க வேணும்னு அவர்கள் நோக்கம்.

மாலுாரில் செங்கோட்டைக்காரர் ஆதரவாளர்கள் உள்ளாட்சியில் கணிசமான ஓட்டு ஸ்டாக் இருக்குதாம். முல்பாகலில் கூட சுயேச்சை அசம்பிளிகாரர், பூவுக்கு ஆதரவாக இருக்காராம். இதனால், நாங்க தான் ஜெயிக்க போறோம்னு இப்பவே தாளம் தட்டுறாங்க!

வில்லன்கள் ஜாஸ்தி!

கைக்காரர்களில், 'சீட்' கேட்போர் பட்டியல் அதிகரித்து வருவது. வங்கிக்காரர், மாவட்ட தலைவர், 'மாஜி' சட்ட மேலவை தலைவரு, ஒரு வங்கி டைரக்டரு என பத்து பேர் கியூவில் நிற்கிறாங்க.

கட்சியை விட நபர் தான் முக்கியம்னு உள்வேலை நடக்குது. எம்.பி., தேர்தலில் கையை தோற்கடிக்க விதையாக இருந்த வங்கிக்காரருக்கு எதிராக, 'மாஜி' முனி தனது செல்வாக்கை காட்டும் நேரமிதுன்னு பார்வையாலே பதற வைக்கிறார்.

மாவட்ட தலைவருக்கும் சிபாரிசுகள் சமமாக கூடிடிச்சாம். சீட் முடிவுக்கு பின் தான் யாருக்கு ஆதரவுன்னு தெரிய போகுது. கை கட்சிக்குள் சபலங்கள், நிறைய வில்லன்கள் இருப்பதால் கோலாரில் ஜெயிப்பது தடுமாற்றமென பலரு கருதுறாங்க!

ஆபிசர்கள் துாங்குறாங்க!

முனிசி., ஆபிசர்களிடம் உறுப்பினர்களின் எந்த வேலையும் நடக்கிறதில்லன்னு அங்கலாய்க்கிறாங்க.

ஆபிசே கதியா இருக்கிற ஆபிசர்கள் வார்டு பக்கம் வந்து பார்க்கணுமுன்னு கொஞ்சம் சத்தம் போட்டால், போலீசில் புகார் செய்யப் போறதா மிரட்டுறாங்களாம்.

உறுப்பினர்கள், 'பவர்லெஸ்'காரர்களாக இப்புடி எந்த காலத்திலுமே இருந்தது கிடையாதாம்.

ஒவ்வொரு தெருவிலும், சாலையிலும் சாக்கடை தேங்கி நாறுகிறது. சுகாதார சீர்கேடுபற்றி டைரக்டா கலெக்டருக்கு கம்பிளைன்ட் தரப்போறாங்களாம்.

பாதாள சாக்கடைக்கு வெட்டிய பள்ளங்களால் சேறு சகதியா மாறியிருக்கு. இதுக்கு யாரிடம் நியாயம் கேட்பது.

தடுப்பணை ஏற்படுத்துவாங்களா?

சுரங்க ஊற்று நீர் கொப்பளித்து வெளியேறியவாறு இருக்குது. இது ஆபத்தான நிலையில் இருப்பதால், தடுக்க திட்டம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

உலகிலேயே இரண்டாவது ஆழமான சுரங்கம் உள்ள, கோல்டு விளைகிற நகரில் சுரங்க நீர் பெருகி வெளியேறியவாறு இருப்பதால், கோல்டன் சிட்டியில் பேராபத்து இருப்பதாக தொழில்நுட்பம் தெரிந்த தொழிலாளர்கள் கூறுறாங்க. இங்கே தடுப்பணை ஏற்படுத்தலாம்.

சுரங்க நீரை ராட்சஷ பாம்புகளை இயக்கி, கோலார் மாவட்டத்துக்கே தண்ணீர் கிடைக்க செய்யலாம்.

இதுபற்றி நீர்வளத்துறை நிபுணர்கள் கவனம் செலுத்த வேணும்னு, 'மாஜி' தொழிலாளர்கள் பேசிக்கிறாங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X