கூட்டுறவு மத்திய வங்கி வாட்ச்மேன் கொலை ஏராளமான பணம், தங்க நகைகள் கொள்ளை

Added : நவ 16, 2021
Share
Advertisement
துமகூரு-துமகூரு மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி வாட்ச் மேனை கொடூரமாக தாக்கி கொலை செய்து, ரொக்க பணம், தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துமகூரு மாவட்டம் நாகவள்ளி கிராமத்தில் மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி அமைந்துள்ளது. முக்கிய சாலையில் இருப்பதால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.நேற்று முன்தினம்

துமகூரு-துமகூரு மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி வாட்ச் மேனை கொடூரமாக தாக்கி கொலை செய்து, ரொக்க பணம், தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துமகூரு மாவட்டம் நாகவள்ளி கிராமத்தில் மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி அமைந்துள்ளது. முக்கிய சாலையில் இருப்பதால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த வங்கிக்கு மர்ம நபர்கள் சிலர் திடீரென வந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வாட்ச் மேன், சித்தப்பா, 55, என்பவரை பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் இறந்தார்.பின் வங்கியினுள் புகுந்த மர்ம நபர்கள் லாக்கர்களை உடைத்து ரொக்க பணம், தங்க நகைகள் கொள்ளை அடித்து தப்பி சென்றனர்.நேற்று காலை வங்கி முன், வாட்ச் மேன் இறந்த நிலையில் கிடப்பதை பார்த்த மக்கள், அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.துமகூரு மாவட்ட உதவி எஸ்.பி., ராகுல்குமார் உட்பட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.மோப்ப நாய் சிறிது தொலைவு ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்தனர்.வங்கியில் பொருத்தப்பட்டிருந்த மற்றும் அந்த சாலையில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்கின்றனர். கொள்ளையர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.எவ்வளவு ரொக்கம், தங்க நகைகள் கொள்ளை போனது என்பது வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.இதற்கிடையில் லாக்கரில் நகைகள் வைத்திருந்த வாடிக்கையாளர்கள் வங்கி முன் குவிந்து, தங்கள் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா என்று கவலையுடன் விசாரிக்கின்றனர்.நேற்று முழுதும் அப்பகுதி பதற்றமாக காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X