பொது செய்தி

இந்தியா

பள்ளிக்கு தடை சொல்லும் பெற்றோர்; அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
பெங்களூரு-பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தை தொழிலாளர்களாக மாறிய மாணவர்களை மீட்க வேண்டுமென குழந்தைகள் நல சங்கத்தினர் கோரியுள்ளனர்.கொரோனா பாதிப்பால் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. ஆன்லைன் கல்விக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பினும் பொருளாதார சூழலால் மாணவர்களை பள்ளியிலிருந்து பெற்றோர் இடைநிறுத்தினர்.இன்னும் சில மாணவர்கள், ஆன்லைன் வகுப்புகளில்

பெங்களூரு-பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தை தொழிலாளர்களாக மாறிய மாணவர்களை மீட்க வேண்டுமென குழந்தைகள் நல சங்கத்தினர் கோரியுள்ளனர்.கொரோனா பாதிப்பால் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. ஆன்லைன் கல்விக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பினும் பொருளாதார சூழலால் மாணவர்களை பள்ளியிலிருந்து பெற்றோர் இடைநிறுத்தினர்.இன்னும் சில மாணவர்கள், ஆன்லைன் வகுப்புகளில் ஆர்வமிழந்து, தங்களின் பெற்றோர் செய்யும் தொழில்களை கற்றுக்கொண்டனர். சிறிய வேலைப்பாடுகளை அறிந்து கொள்வது மற்றும் பெற்றோருக்கு உதவியாகவும் இருந்தனர்.பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதும், மாணவர்களுக்கு விருப்பம் இருப்பினும், பல பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.'சைல்டு லைன்' அமைப்பினர் கூறியதாவது:சில மாதங்களாக, ஒவ்வொரு மாதமும் சராசரியாக பத்து புகார்கள் பதிவாகின்றன. பெற்றோரே, பள்ளிக்கு அனுப்புவதற்கு தடையாக இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.சிறு தொழில் செய்யும் பெற்றோர் பலரும் தங்களின் குழந்தைகளை உதவிக்காகவும், வியாபாரத்திலும் ஈடுபடுத்துகின்றனர்.கொரோனாவால் பொருளாதார இழப்பு ஏற்பட்டதை ஈடுகட்ட, மாணவர்களின் கல்வியை தடுக்கின்றனர். அத்தகைய பெற்றோருக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கி கவுன்சிலிங் அளிக்கிறோம்.குறிப்பாக, கிராமப்பகுதிகளில் விவசாயத்தில் மாணவர்களை அதிகமாக ஈடுபடுத்துகின்றனர்.குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மாநிலம் முழுவதுமே இந்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X