பொது செய்தி

இந்தியா

உளவியல் ரீதியாக புத்துணர்ச்சி; கல்லூரி விழாக்கள் துவக்கம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
தட்சிணகன்னடா-மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக புத்துணர்ச்சி அளிக்க, கல்லுாரிகளில் விழாக்கள் நடத்த நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.பல மாதங்களாக வீட்டில் முடங்கியிருந்த வளர் இளம் பருவத்தினர், கல்லுாரிக்கு செல்ல துவங்கியுள்ளனர்.வழக்கமாகவே முதலாண்டு கல்லுாரி செல்லும் மாணவர்களை வரவேற்கும் வகையிலும், அந்த சூழலுக்கு அவர்களை தயார்படுத்தி கொள்வதற்கும், பல்வேறு

தட்சிணகன்னடா-மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக புத்துணர்ச்சி அளிக்க, கல்லுாரிகளில் விழாக்கள் நடத்த நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.பல மாதங்களாக வீட்டில் முடங்கியிருந்த வளர் இளம் பருவத்தினர், கல்லுாரிக்கு செல்ல துவங்கியுள்ளனர்.வழக்கமாகவே முதலாண்டு கல்லுாரி செல்லும் மாணவர்களை வரவேற்கும் வகையிலும், அந்த சூழலுக்கு அவர்களை தயார்படுத்தி கொள்வதற்கும், பல்வேறு விழாக்களும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.கடந்த இரண்டாண்டுகளாக அதற்கான வாய்ப்புகள் இல்லை. தற்போது மாணவர்கள் கல்லுாரி சென்றவுடனே படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இதனால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாகவும், புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் கல்லுாரி அளவிலான நிகழ்ச்சிகள், மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான போட்டிகளும் நடத்த தயாராகி வருகின்றன.மங்களூரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி நிறுவன தலைவர் ராஜேஷ் கவுடா கூறியதாவது:மாணவர்களுக்கு புத்தக கல்வி எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே போல் அவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தி கொள்வதையும் கல்லுாரிகள் ஊக்குவிக்க வேண்டும்.பல மாதங்களாக வீட்டில் இருந்த மாணவர்களை, மீண்டும் புத்தக கல்வியில் மூழ்கடிக்காமல் அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதற்கு விழாக்கள் நடத்த வேண்டும்.பாதுகாப்பு காரணமாக, மற்ற கல்லுாரிகளுடன் இணைந்து நடத்தும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X