குஜராத்தில் ரூ.600 கோடி 'ஹெராயின்' பறிமுதல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஆமதாபாத் : குஜராத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 600 கோடி ரூபாய் மதிப்பிலான 120 கிலோ 'ஹெராயின்' போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.குஜராத்தில் மோர்பி மாவட்டத்தின் ஜின்குடா கிராமத்தில், போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசியத் தகவல்கள் கிடைத்தன. அங்கு கட்டுமான பணிகள் நடந்து வந்த ஒரு வீட்டில், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு
 குஜராத்தில் ரூ.600 கோடி 'ஹெராயின்' பறிமுதல்

ஆமதாபாத் : குஜராத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 600 கோடி ரூபாய் மதிப்பிலான 120 கிலோ 'ஹெராயின்' போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜராத்தில் மோர்பி மாவட்டத்தின் ஜின்குடா கிராமத்தில், போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசியத் தகவல்கள் கிடைத்தன. அங்கு கட்டுமான பணிகள் நடந்து வந்த ஒரு வீட்டில், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து 120 கிலோ எடையிலான ஹெராயின் கண்டெடுக்கப்பட்டது. 600 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஹித் பஷீர் பலுாச் என்பவர், இந்த போதைப் பொருளை கடல் வழியாக இங்குள்ள முக்தார் ஹுசைன் மற்றும் சம்சுதின் ஹுசைன்மியான் சையத் என்ற கடத்தல்காரர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதை, ஆப்ரிக்காவுக்கு அனுப்பி வைக்க இவர்கள் திட்டமிட்டிருந்ததும் அம்பலமாகி உள்ளது.இதில் சம்பந்தப்பட்ட இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கட்டுமான பணிகள் நடந்து வரும் அந்த வீட்டின் உரிமையாளரான குலாம் ஹுசைன் உமர் பகாத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X