போலீஸ் டைரி

Added : நவ 16, 2021
Share
Advertisement
மின் அழுத்தத்தால் தீ விபத்துசோழவரம்: சோழவரம் அடுத்த, காந்தி நகரை சேர்ந்தவர் ரலித் பசிரியா, 38. கடந்த 13ம் தேதி இரவு, இவரது வீட்டில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது.அப்போது திடீரென ஏற்பட்ட அதிக மின்அழுத்தத்தால், வீட்டில் இருந்து பிரிஜ் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. வீடு முழுதும் தீ பரவியதால், வீட்டில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்தன. அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் தீ

மின் அழுத்தத்தால் தீ விபத்துசோழவரம்: சோழவரம் அடுத்த, காந்தி நகரை சேர்ந்தவர் ரலித் பசிரியா, 38. கடந்த 13ம் தேதி இரவு, இவரது வீட்டில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது.அப்போது திடீரென ஏற்பட்ட அதிக மின்அழுத்தத்தால், வீட்டில் இருந்து பிரிஜ் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. வீடு முழுதும் தீ பரவியதால், வீட்டில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்தன. அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் தீ அணைப்பதற்குள், வீட்டில் இருந்த 'டிவி', மின்விசிறி, உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் கருகி போயின.தீ விபத்து தொடர்பாக, ரலித் பசிரியா, சோழவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.எட்டு பேருக்கு 'காப்பு'சோழவரம்: சோழவரம் அடுத்த, அலமாதி பால்பண்ணை அருகே, நேற்று முன்தினம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள புதர் மறைவில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதை அறிந்து, அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில் அவர்கள், செங்குன்றம் மற்றும் மீஞ்சூரைச் சேர்ந்த 20 - 27 வயதுடைய எட்டு பேரை, சோழவரம் போலீசார் கைது செய்தனர். விற்பனைக்கு வைத்திருந்த, 1.2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விபத்தில் ஒருவர் உயிரிழப்புசோழவரம்: செங்குன்றம், பனையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தருமன், 55. இவர் சோழவரம் அடுத்த, எடப்பாளையம் பகுதியில் வெங்காய கிடங்கு வைத்து உள்ளார்.மழையால் வெங்காய கிடங்கின் கூரை சேதம் அடைந்திருந்தது. கடந்த 13ம் தேதி, கூரை மீது ஏறி சேதம் அடைந்த பகுதிகளை சரி செய்து கொண்டிருந்தோது, கால் தவறி விழுந்தார்.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு நேற்று முன்தினம் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X