போலீஸ் டைரி ..| Dinamalar

போலீஸ் டைரி ..

Added : நவ 16, 2021
Share
இரு மாடுகள் பலிதிருத்தணி: திருத்தணி அடுத்த, நாபளூர் ஊராட்சிக்குட்ட குன்னத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரம்மாள்,65. இவர், இரு பசு மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி முதல், இம்மாதம் 13ம் தேதி வரை தொடர்ந்து மழை பெய்ததால், இரு பசுக்களும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று காலை, வீட்டின் அருகே கட்டியிருந்த இரு பசு மாடுகளும் திடீரென

இரு மாடுகள் பலிதிருத்தணி: திருத்தணி அடுத்த, நாபளூர் ஊராட்சிக்குட்ட குன்னத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரம்மாள்,65. இவர், இரு பசு மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி முதல், இம்மாதம் 13ம் தேதி வரை தொடர்ந்து மழை பெய்ததால், இரு பசுக்களும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று காலை, வீட்டின் அருகே கட்டியிருந்த இரு பசு மாடுகளும் திடீரென மயங்கி விழுந்தன. இதையடுத்து சந்திரம்மாள் கால்நடை உதவி மருத்துவர் மற்றும் ஊழியர்களை அழைத்து வந்து பார்த்த போது இரு பசுக்களும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X