தமிழ்நாடு

23,000 ஏக்கர்!  3 மாவட்டங்களில் நெல் பயிர் சேதம்..அதீத கன மழையால் விவசாயிகள் சோகம்� 200 ஏக்கர் தோட்டக்கலை பயிர்களும் வீண்

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021
Share
Advertisement
வடகிழக்கு பருவ மழையால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட, 23 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. வாழை, கரும்பு உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் 200 ஏக்கர் சேதமடைந்துள்ளதாக, வேளாண் துறையினர் தெரிவித்தனர். அளவுக்கு மீறி பெய்த அதீத கன மழையால், பயிர்களை இழந்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவ மழை காரணமாக,
 23,000 ஏக்கர்!  3 மாவட்டங்களில் நெல் பயிர் சேதம்..அதீத கன மழையால் விவசாயிகள் சோகம்� 200 ஏக்கர் தோட்டக்கலை பயிர்களும் வீண்

வடகிழக்கு பருவ மழையால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட, 23 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் சேதமடைந்துள்ளது.

வாழை, கரும்பு உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் 200 ஏக்கர் சேதமடைந்துள்ளதாக, வேளாண் துறையினர் தெரிவித்தனர். அளவுக்கு மீறி பெய்த அதீத கன மழையால், பயிர்களை இழந்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவ மழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில், 3ம் தேதி முதல், கன மழை பெய்து வருகிறது. இதனால், திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உட்பட, மாவட்டம் முழுதும், கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தின், ஆண்டு சராசரி மழையளவு, 115 செ.மீ., ஆகும். ஆனால், இதுவரை, சராசரியை கடந்து, 144 செ.மீ., மழை பொழிந்துள்ளது.இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில், 133 இடங்களில் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வீடுகளை பொறுத்தவரை, 927 வீடுகள் சேதமடைந்துள்ளன; 78 கால்நடைகள் இறந்துள்ளன.பயிர் சேதம்திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பு சம்பா பருவத்தில், 72 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மேலும், கரும்பு, வாழை, காய்கறி, பூ உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள், 2,000 ஏக்கர் பரப்பளவிற்கு மேல், விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர்.வடகிழக்கு பருவ மழை காரணமாக, நெல் பயிர் மற்றும், வாழை, கரும்பு, காய்கறி, மலர் என, விவசாய நிலங்கள் அனைத்தும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன.

சேதமடைந்த, பயிர்களை கணக்கெடுப்பு நடத்த, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, வருவாய், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர், சேதமடைந்த பயிர்களை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இது குறித்து, மாவட்ட வேளாண் துறை அலுவலர் கூறியதாவது:கலெக்டர் உத்தரவின் பேரில், 14 ஒன்றியங்களிலும், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், வருவாய் துறை ஊழியர்கள் இணைந்து, மழை சேத விபரத்தை கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.இதில், மாவட்டம் முழுதும், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான, நெல் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. மாவட்டத்தில், குறிப்பாக, பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் சோழவரம் பகுதிகளில், அதிகளவில் நெல் வயல்களில் தண்ணீர் மூழ்கி உள்ளது. பொன்னேரி பகுதியில் மட்டும், 11 ஆயிரத்து, 100 ஏக்கர் நெல் பயிர்கள், வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.தோட்டக்கலை பயிர்களான, கரும்பு, வாழை, மலர், காய்கறிகள் என, 200 ஏக்கர் சேதமடைந்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சியில் 566 ஏக்கர்காஞ்சிபுரம் மாவட்டத்தில், 566 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது தெரியவந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியதுடன், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. நெற்பயிர்கள் மூழ்கி, பயிர்கள் நாசமானது.வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிக்க முடியாத காரணத்தால், நெற்பயிர்கள் நாசமானதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேளாண் துறை, வருவாய் துறை ஆகியோர் பாதிக்கப்பட்ட நெற்பயிர் விபரங்களை சேகரித்து, கலெக்டருக்கு அறிக்கையாக தாக்கல் செய்கின்றனர். பெறப்பட்ட விபரங்களை, அரசுக்கு, கலெக்டர் அனுப்பி வருகிறார். அந்த வகையில், நேற்று முன்தினம் வரையிலான கணக்கெடுப்பில், 566 ஏக்கர் பரப்பு நெற்பயிர்கள் நாசமானதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியும், வயல்வெளிகளில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல், வடிந்து செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும், கலெக்டரிடம் மனு அளித்து வருகின்றனர்.

திருப்புட்குழியைச் சேர்ந்த, பிச்சை என்பவர், மழையில் நாசமான நெற்பயிருடன் வந்து, கலெக்டரிடம் நேற்று மனு அளித்தார்.செங்கையில் 2,463 ஏக்கர்செங்கல்பட்டு மாவட்டத்தில், 2,463 ஏக்கர் நெற்பயிர்கள், மழை நீர் சூழ்ந்ததால், பாதிப்பு ஏற்பட்டதாக, வேளாண் துறை அதிகாரி தெரிவித்தார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், காட்டாங்கொளத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், பவுஞ்சூர், சித்தலப்பாக்கம் ஆகிய பகுதிகளில், விவசாய நிலங்களில், சம்பா பட்டத்தில், நெல் பயிர் செய்தனர்.

சில தினங்களாக, கன மழையால், மேற்கண்ட பகுதியில், நெல் பயிர்கள் நீரில் மூழ்கியன. அதன்பின், வேளாண் துறை இணை இயக்குனர் சுரேஷ் தலைமையில், வேளாண துறை உதவி இயக்குனர்கள் கள ஆய்வு செய்தனர்.இதில், மாவட்டத்தில், 2,463 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிய வந்தது. இந்த விபரங்களை, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.பல லட்சம் ரூபாய் இழப்புமழை நீரில் மூழ்கி உள்ள இடங்களில், தண்ணீர் வடிவதற்கு, 10 நாட்கள் ஆகும். அதற்குள் நெற்பயிர்கள் முற்றிலும் அழுகிவிடும். தண்ணீர் வடிந்த இடங்களில், நெற்பயிர்களை வளர்க்க அதிக மருந்தினங்களை செலவிட வேண்டும். அப்போதும், அறுவடையின்போது, ஏக்கருக்கு, 10 மூட்டை நெல் கிடைப்பதே அரிது. மழையால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.சி.ராமு, தலைவர், பொன்னேரி வட்டார விவசாயிகள் சங்கம்வளர்ச்சி பாதித்து உள்ளதுநெற்பயிர்கள் அதிக நாட்கள் தண்ணீரில் மூழ்கி இருந்ததால் அழுகியுள்ளன. நடவு செய்து ஒரு மாதமே ஆனதால், அவற்றின் வளர்ச்சி பாதித்து உள்ளது. தண்ணீர் வடிந்தாலும், சரியான வளர்ச்சியும், எதிர்பார்த்த மகசூலும் கிடைக்காது.வேளாண் துறை அதிகாரி, மீஞ்சூர்வேளாண் துறையும், வருவாய் துறையும், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை முறையாக கணக்கீடு செய்ய வேண்டும். ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மட்டும் கணக்கெடுக்க கூடாது. அதற்குள் பாதிப்பு இருந்தாலும் கணக்கில் சேர்க்க வேண்டும். மழையால் வீடு இடிந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கே.நேரு, மாவட்ட செயலர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காஞ்சிபுரம்

312 பேர் புகார்

மழை, வெள்ளம் குறித்த பாதிப்பை பொதுமக்கள் தெரிவிக்க, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை, 312 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 291 புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 21 புகார் மனுக்கள் குறித்து, அதிகாரிகள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளதாக, மாவட்ட பேரிடர் மேலாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X