400 பேரின் காமப் பசிக்கு இரையான 16 வயது சிறுமி

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
அவுரங்காபாத் : மஹாராஷ்டிராவில், தாயை இழந்த, 16 வயது சிறுமியை ஒரு போலீஸ்காரர் உட்பட 400 பேர் பாலியல் கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.மஹாராஷ்டிராவில் உள்ள பீட் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் தாய், இரு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து, தந்தை, சிறுமியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். புகுந்த வீட்டிற்குச் சென்ற சிறுமி, மாமனாரின்
Minor girl, gang raped, 400 men, Maharashtra

அவுரங்காபாத் : மஹாராஷ்டிராவில், தாயை இழந்த, 16 வயது சிறுமியை ஒரு போலீஸ்காரர் உட்பட 400 பேர் பாலியல் கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் உள்ள பீட் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் தாய், இரு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து, தந்தை, சிறுமியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். புகுந்த வீட்டிற்குச் சென்ற சிறுமி, மாமனாரின் பாலியல் தொல்லை தாங்காமல் சில மாதங்களில் பிறந்த வீட்டிற்கு வந்து விட்டார். அதன் பின் வேலை தேடி அம்பிஜோகய் நகருக்குச் சென்றுள்ளார்.


latest tamil news


அங்கு அச்சிறுமியை சிலர் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களில் ஒரு போலீஸ்காரர் உட்பட 400 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தற்போது இரண்டு மாத கர்ப்பிணியான அந்த சிறுமி கொடுத்த புகாரில், நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் கருவைக் கலைக்க, குழந்தைகள் நல்வாழ்வுக் குழு சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

மஹாராஷ்டிராவில் டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை, 33 இளைஞர்கள் ஒன்பது மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தது சமீபத்தில் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஒரு சிறுமியை 400 பேர் பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
16-நவ-202117:47:13 IST Report Abuse
THINAKAREN KARAMANI 400 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்கள், 33 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்று புள்ளிவிவரங்களை மட்டும் கொடுத்துக் கொண்டிருங்கள். அவர்களை பிடித்தோமா உடனடியாகத் தண்டனை கொடுத்தோமா என்றில்லாமல் அவர்களைக் கைது பண்ணி ஜெயிலில் கரியும்சோறும்போட்டு வருடக்கணக்கில் உட்காரவைத்திருங்கள். முதலில் சட்டத்தைக் கடுமையாக்குங்கள் பின் வழக்குகளை உடனுக்குடன் முடித்திடுங்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-நவ-202117:36:41 IST Report Abuse
Kasimani Baskaran இதனால் மோடி, அமித்ஷா, யோகி, நிர்மலா சீதாராமன் போன்றோருக்கு வாழ்த்துதல் கிடைக்கும் மற்றப்படி ஒன்றும் நடக்காது - ஏனென்றால் நடந்தது மஹாராஷ்டிராவில்... உணவு எங்கள் உரிமை என்று சொல்வதால் வந்த பிரச்சினை. கண்டதையும் தின்றால் நல்லொழுக்கம் மனக்கட்டுப்பாடு எல்லாம் வராது. திமிர்தான் ஏறும்...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-நவ-202115:54:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்தியா இந்துக்கள் நாடு..
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
16-நவ-202119:05:13 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANபுரியுது இதுல ஒருத்தன் உன் ஆளா இருந்தாலும் நீரெண்டுமு-ழம்கயி றெடு-த்து தொங்கிடணும் ஓகேவா ?...
Rate this:
visu - Pondicherry,இந்தியா
18-நவ-202112:21:12 IST Report Abuse
visuஅவனே ஒரு அல்லக்கை...
Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
20-நவ-202115:45:37 IST Report Abuse
M Selvaraaj Prabuபெயர் சொல்ல தில்லு இல்லாத நபர்....
Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
22-நவ-202117:05:22 IST Report Abuse
M Selvaraaj Prabuநபர் இல்லப்பா, நம்பர். அந்த நம்பர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X