பொது செய்தி

தமிழ்நாடு

'இன்று முதல் வீடு தேடிப்போய் இரண்டாம் தவணை தடுப்பூசி'; அமைச்சர் சுப்பிரமணியன்

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்தில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போடாத, 50 லட்சம் பேருக்கு, வீடுதேடிச் சென்று இன்று முதல் தடுப்பூசி போடப்பட உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னையில் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழகத்தில் 5,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. இதுவரை 7.5 லட்சம் பேர் மழைக்கால நோய்களுக்கு

சென்னை : ''தமிழகத்தில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போடாத, 50 லட்சம் பேருக்கு, வீடுதேடிச் சென்று இன்று முதல் தடுப்பூசி போடப்பட உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.



latest tamil news


சென்னையில் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழகத்தில் 5,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. இதுவரை 7.5 லட்சம் பேர் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். உறுப்பு தான பதிவுக்கு ஆதார் எண் முக்கியம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது, உறுப்பு தானம் செய்வர்களை கண்டறியவும், அவர்களின் குடும்பத்தினரை கவுரப்படுத்தவுமே கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 73 சதவீதத்தினரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 35 சதவீதத்தினரும் போட்டுள்ளனர்.


latest tamil news


அவகாசம் முடிந்தும் 50 லட்சம் பேர், இரண்டாவது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கே சென்று, இன்று முதல் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KavikumarRam - Indian,இந்தியா
16-நவ-202114:30:00 IST Report Abuse
KavikumarRam மொதல்ல தெருவுல ஓடுற சாக்கடையை அடையாமைய்யா. சும்மா வாயிலேயே வடைய சுட்டுக்கிட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X