சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவரை மீட்க கோரி பெண் போராட்டம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு--கணவரை மீட்டுத்தர கோரி, இளம்பெண் குழந்தையுடன், தர்ணா போராட்டத்தில், நேற்று ஈடுபட்டார்.மதுராந்தகம் அடுத்த, புக்கத்துறையைச் சேர்ந்த பாஸ்கர் மகள் கீதா என்பவருக்கும், மதுராந்தகம் நகரத்தைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இவர்களுக்கு, நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், அவரது கணவருக்கு, வேறு பெண்ணுடன்

செங்கல்பட்டு--கணவரை மீட்டுத்தர கோரி, இளம்பெண் குழந்தையுடன், தர்ணா போராட்டத்தில், நேற்று ஈடுபட்டார்.மதுராந்தகம் அடுத்த, புக்கத்துறையைச் சேர்ந்த பாஸ்கர் மகள் கீதா என்பவருக்கும், மதுராந்தகம் நகரத்தைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இவர்களுக்கு, நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், அவரது கணவருக்கு, வேறு பெண்ணுடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது மனைவி கீதா, மேல்மருவத்துவர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்மீது, நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், மேற்கண்ட புகார் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, அவர், தன் பெண் குழந்தையுடன், செங்கல்பட்டு எஸ்.பி., அலுவலகம் முன், நேற்று, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த போலீசார், புகார் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததையடுத்து, கலைந்து சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X