பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி நீதி துறை நடுவர் எண் ஒன்று நீதிமன்றம் தற்காலிக இடம் மாற்றம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் எண் ஒன்று நீதிமன்றம் பழைய கட்டடம் பழுது பார்க்கும் பணி நடைபெற இருக்கிறது. இதனால் தற்காலிகமாக, சீனிவாசா மாநகராட்சி பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இயங்கிய நீதித்துறை நடுவர் எண் ஒன்று கட்டடம், 1901ல் கட்டப்பட்டது. நுாற்றாண்டை கடந்த இந்த நீதிமன்ற கட்டடம் பழுதடைந்தது.கட்டடம் நிலவரம்

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் எண் ஒன்று நீதிமன்றம் பழைய கட்டடம் பழுது பார்க்கும் பணி நடைபெற இருக்கிறது. இதனால் தற்காலிகமாக, சீனிவாசா மாநகராட்சி பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இயங்கிய நீதித்துறை நடுவர் எண் ஒன்று கட்டடம், 1901ல் கட்டப்பட்டது. நுாற்றாண்டை கடந்த இந்த நீதிமன்ற கட்டடம் பழுதடைந்தது.கட்டடம் நிலவரம் குறித்து பொதுப்பணித் துறை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. இதை தொடர்ந்து, மாவட்ட முதன்மை நீதிபதி பரிந்துரையின்படி, சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுபடியும், போர்ட்போலியோ நீதியரசர்கள் உத்தரவுபடியும் இடம் மாற்றம் செய்யப்பட்டது.காஞ்சிபுரம் மாநகராட்சி சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் ஒரு பகுதியில் இந்த நீதிமன்றம் நேற்று முதல் தற்காலிகமாக செயல்பட துவங்கியது.பழைய நீதி மன்ற கட்டடம் சீரமைப்பு பணி முடிந்ததும், மீண்டும், அங்கு செயல்படும் என தெரிகிறது.இடம் மாற்றம் குறித்து பழைய நீதிமன்ற கட்டடத்தில் அறிவிப்பு 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது. அதே வளாகத்தில் உள்ள மற்ற நீதிமன்றங்கள் அங்கேயே வழக்கம் போல இயங்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X