பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்--ஒரகடத்தில் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாயை கலெக்டர் ஆர்த்தி நேற்று வழங்கினார்.ஒரகடம் அருகில் உள்ள வாரணவாசி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துளசிதாஸ், 40. இவர், ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்தார்.இவருடன், நத்தாநல்லுார் பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரும் பணியாற்றி வந்தார். கடந்த

காஞ்சிபுரம்--ஒரகடத்தில் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாயை கலெக்டர் ஆர்த்தி நேற்று வழங்கினார்.ஒரகடம் அருகில் உள்ள வாரணவாசி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துளசிதாஸ், 40. இவர், ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்தார்.இவருடன், நத்தாநல்லுார் பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரும் பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு, இருவரும் வெளியே சென்றபோது, மர்ம நபர்களால் துளசிதாஸ் கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தில் ராமு உயிர் பிழைத்தார். இறந்த துளசிதாசின் குடும்பத்துக்கு, முதலமைச்சரின் நிவாரண நிதி, 10 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டது. அந்த நிதி, அவரது குடும்பத்தினரிடம், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஆர்த்தி, நேற்று வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X