பொது செய்தி

தமிழ்நாடு

பறிகொடுத்த வீடு மீண்டும் பெறல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்--'நம்' நாளிதழில் வெளியான செய்தி எதிரொலி காரணமாக, கலெக்டர் உத்தரவை தொடர்ந்து, ஏனாத்துார் சமத்துவபுர வீடு உரியவரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துாரில் உள்ள சமத்துவபுரத்தில், 1999ல், அப்போதைய கலெக்டர் இறையன்பு மூலம், 100 பேருக்கு இலவச வீடு மற்றும் 5 சென்ட் நிலம் வழங்கப்பட்டது.அவ்வாறு, வீடு மற்றும் நிலம் பெற்றவர்களை, அங்குள்ள சமூக

காஞ்சிபுரம்--'நம்' நாளிதழில் வெளியான செய்தி எதிரொலி காரணமாக, கலெக்டர் உத்தரவை தொடர்ந்து, ஏனாத்துார் சமத்துவபுர வீடு உரியவரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துாரில் உள்ள சமத்துவபுரத்தில், 1999ல், அப்போதைய கலெக்டர் இறையன்பு மூலம், 100 பேருக்கு இலவச வீடு மற்றும் 5 சென்ட் நிலம் வழங்கப்பட்டது.அவ்வாறு, வீடு மற்றும் நிலம் பெற்றவர்களை, அங்குள்ள சமூக விரோதிகள், நில தரகர்கள் தொந்தரவு செய்து காலி செய்ய வைத்தனர். பயனாளிகள் பலர் உயிருக்கு பயந்து, வீட்டை விட்டு காலி செய்தனர்.அதிகாரம் படைத்த சிலர், பயனாளிகளை ஏமாற்றி வீட்டை அபகரித்தனர். இதுபோன்று பாதிக்கப்பட்ட சாந்தி, 50, என்பவர், ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்து வந்தார்.போலீஸ் ஒருவர் தன் வீட்டை அபகரித்ததாக புகார் தெரிவித்து வந்தார். இதுகுறித்து, போலீஸ், கூட்டுறவு, வருவாய் துறைகளை சார்ந்த அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.பல ஆண்டுகளாக அலைந்த சாந்தி குறித்து, 'தினமலர்' நாளிதழில், கடந்த 2ம் தேதி, விரிவான செய்தி வெளியிடப்பட்டது.செய்தி வெளியான அடுத்த நாளே, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, மனுதாரர் சாந்தியை அழைத்து விசாரணை நடத்தினார். அதிகாரிகளை கொண்டு ஆவணங்களையும் சரி பார்த்தார்.அவரது வீட்டை ஒப்படைக்க, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் ஆகியோருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஏனாத்துார் சமத்துவபுரத்தில் உள்ள வீடு, சாந்திக்கு நேற்று ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X