புதுடில்லி : ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, 80 சதவீத ஹிந்துக்களை மட்டுமே இந்தியர்களாக கருதுகிறது,'' என, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித், 'சன்ரைஸ் ஓவர் அயோத்தியா: நேஷன்ஹுட் இன் அவர் டைம்ஸ்' என்ற புத்தகத்தை எழுதி சமீபத்தில் வெளியிட்டார்.
இதில், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை, ஐ.எஸ்., மற்றும் போகோ ஹராம் பயங்கரவாத இயக்கங்களுடன் ஒப்பிட்டு அவர் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சல்மான் குர்ஷித் மீது டில்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, நாட்டில் உள்ள 80 சதவீத ஹிந்துக்களை மட்டுமே இந்தியர்களாக கருதுகிறது,'' என்றார். இதற்கு பா.ஜ., தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE