பாலாற்றில் வெள்ளம்: ஏரிக்கு நீர் செல்ல வழியில்லை

Added : நவ 16, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டும் பெரும்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கான வழி இல்லை என, அப்பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த, பெரும்பாக்கம் ஏரி பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த ஏரி நிரம்பி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த ஏரிக்கு, வேலுார் மாவட்டம், சங்கரம்பாடி பாலாற்றில் இருந்து நீர் வரத்து கால்வாய்

காஞ்சிபுரம்-பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டும் பெரும்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கான வழி இல்லை என, அப்பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த, பெரும்பாக்கம் ஏரி பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த ஏரி நிரம்பி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த ஏரிக்கு, வேலுார் மாவட்டம், சங்கரம்பாடி பாலாற்றில் இருந்து நீர் வரத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் பாலாற்றில் மணல் குவாரிகள் இயங்கிய போது அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டு பெரும்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் மேடானது. இதனால், ஆற்றில் இருந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அந்த நீர்வரத்து கால்வாயை கடந்த ஆண்டு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ், 30.86 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.ஆனால், சமீபத்தில் பெய்த மழைக்கு சீரமைக்கப்பட்ட கால்வாய் தடுப்பு பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த வாரம் ஊர் பொது மக்கள் மற்றும் பொதுப்பணித் துறை சார்பில், கால்வாயை சீரமைக்கும் முயற்சி செய்தும் பயன் அளிக்கவில்லை.மண்ணை கொட்டி அடைத்தாலும் மீண்டும் உடைப்பு ஏற்படுகிறது. நீர்வரத்து கால்வாயை பள்ளமாக துார் வாரினால் தான் ஏரிக்கு தண்ணீர் வரும். அதற்கான நடவடிக்கை பொதுப்பணித் துறை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X