மக்களைத் தேடி மருத்துவம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்களைத் தேடி மருத்துவம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

Added : நவ 16, 2021
Share
தியாகதுருகம்-தியாகதுருகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்க விழா நடந்தது.வட்டார அரசு மருத்துவமனையில் நடந்த விழாவிற்கு, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், தொழிலதிபர் மணிமாறன் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் வரவேற்றார்.மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை

தியாகதுருகம்-தியாகதுருகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்க விழா நடந்தது.வட்டார அரசு மருத்துவமனையில் நடந்த விழாவிற்கு, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், தொழிலதிபர் மணிமாறன் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் வரவேற்றார்.மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.பின், கிராமங்களுக்கு மருத்துவ சேவை வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.டாக்டர்கள் மணிகண்டன், கோமதி, சிவராஜ், தி.மு.க., நிர்வாகிகள் அண்ணாதுரை, எத்திராஜ், மலையரசன், பெருமாள், ராதாகிருஷ்ணன், முரசொலி மாறன், மூர்த்தி, சங்கர், சிலம்பரசன் மற்றும் மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X