கிரைம் செய்திகள்...| Dinamalar

கிரைம் செய்திகள்...

Added : நவ 16, 2021
Share
ஓடையில் மூழ்கி மாணவி பலிவிழுப்புரம்: பொய்யப்பாக்கம் புதுகாலனியைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் சுஜிதா, 14; அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாதிரிமங்கலம் பம்பை ஓடையில் குளித்தபோது, நீரில் மூழ்கி இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கார் மோதி வாலிபர் பலிவிழுப்புரம்: சோழகனுாரைச்

ஓடையில் மூழ்கி மாணவி பலிவிழுப்புரம்: பொய்யப்பாக்கம் புதுகாலனியைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் சுஜிதா, 14; அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாதிரிமங்கலம் பம்பை ஓடையில் குளித்தபோது, நீரில் மூழ்கி இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கார் மோதி வாலிபர் பலிவிழுப்புரம்: சோழகனுாரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் கவிகுமார், 23; இவர், நேற்று முன்தினம் பைக்கில் செஞ்சி மார்க்கமாக இருந்து விழுப்புரம் நோக்கி வந்தார். தென்னமாதேவி அருகே எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த கவிகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.தகராறு: 11 பேர் மீது வழக்குவிழுப்புரம்: அய்யூர் அகரத்தைச் சேர்ந்தவர் சங்கர், 49; இவரது தம்பிகள் ஆறுமுகம், 40; ஏழுமலை, 35; இவர்களுக்குள் பூர்வீக வீட்டுமனை பாகப்பிரிவினையில் பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 14ம் தேதி ஏற்பட்ட தகராறில், ஆறுமுகம், ஏழுமலை தரப்பினரும், சங்கர் தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு புகாரின்பேரில், ஆறுமுகம், சங்கர் உட்பட 11 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மின்மோட்டார் திருடிய இருவர் கைதுதிண்டிவனம்: ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் விமல்ராஜ் மற்றும் போலீசார் சந்தைமேடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள், சிங்கனுாரைச் சேர்ந்த முருகன் மகன் லட்சுமணன், 23; ராமச்சந்திரன் மகன் ரமேஷ், 20; என்பதும், கடந்த ஆகஸ்ட் மாதம் விழுக்கம் கிராமத்தில், சதீஷ்குமார், 59; என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் திருடிய மின் மோட்டாரை விற்க எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. உடன் இருவரையும் கைது செய்து மின் மோட்டாரை பறிமுதல் செய்தனர்.அடையாளம் தெரியாத நபர் சாவுமரக்காணம்: புதுச்சேரியில் இருந்து தனியார் பஸ் திண்டிவனம் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 47 வயது மதிக்கத்தக்க ஒருவர் புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து பயணம் செய்தார். ஓமந்துார் பஸ் நிறுத்தம் வந்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. திண்டிவனம் செல்வதற்கு டிக்கெட் எடுத்திருந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.வீட்டின் சுவர் இடிந்து பெண் பலிகள்ளக்குறிச்சி: ஏமப்பேர் காலனியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி லட்சுமி, 55; இவர், கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், வீட்டிற்குள் துாங்கிக் கொண்டிருந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார், இறந்த லட்சுமி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X