பொது செய்தி

இந்தியா

உள்துறை செயலர் பதவி மேலும் 2 ஆண்டு நீட்டிப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
புதுடில்லி : மத்திய உள்துறை செயலர், உளவுத் துறை இயக்குனர் ஆகியோரின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை இயக்குனர்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளாக இருந்தது. அதை ஐந்து ஆண்டுகளாக உயர்த்தி, 2021ம் ஆண்டின் மத்திய ஊழல் தடுப்பு ஆணைய திருத்தச் சட்டம் என்ற பெயரில், மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.இந்த அவசர
  உள்துறை செயலர் பதவி மேலும் 2 ஆண்டு நீட்டிப்பு

புதுடில்லி : மத்திய உள்துறை செயலர், உளவுத் துறை இயக்குனர் ஆகியோரின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை இயக்குனர்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளாக இருந்தது. அதை ஐந்து ஆண்டுகளாக உயர்த்தி, 2021ம் ஆண்டின் மத்திய ஊழல் தடுப்பு ஆணைய திருத்தச் சட்டம் என்ற பெயரில், மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் மத்திய உள்துறை செயலர், ராணுவ அமைச்சக செயலர், 'ரா' எனப்படும் உளவுத் துறையின் செயலர், 'ஐபி' எனப்படும், உள்நாட்டு விவகாரங்களுக்கான உளவு அமைப்பின் இயக்குனர் ஆகியோரின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான உத்தரவை மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X