பொது செய்தி

தமிழ்நாடு

இருளர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டியில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர், நரிக்குறவர், நாடோடி குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி, தக்கா மேடு பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க., நகர செயலாளர் நைனா முகமது தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு ஜீவானந்தம், பாலாஜி, முரளி, திலகர், எத்திராஜன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி முன்னாள்

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டியில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர், நரிக்குறவர், நாடோடி குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி, தக்கா மேடு பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க., நகர செயலாளர் நைனா முகமது தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு ஜீவானந்தம், பாலாஜி, முரளி, திலகர், எத்திராஜன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் சர்க்கார் பாபு வரவேற்றார்.விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி இருளர், நரிக்குறவர், நாடோடி குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கி பேசினார்.எம்.எல்.ஏ.,விடம் இருளர் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தருமாறு கோரிக்கை மனு அளித்தனர்.இன்ஸ்பெக்டர் வினாயக முருகன், பேரூராட்சி முன்னாள் சேர்மன் மலர்மன்னன், நகர துணை செயலாளர் வீரவேல், இளைஞரணி பிரசாத், ஒன்றிய கவுன்சிலர் இளவரசி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X