பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு வரவேற்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி விலையில்லா பாட புத்தகம் மற்றும் சீருடை வழங்கினார். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., புகழேந்தி சிறப்புரையாற்றினார்.தி.மு.க., மாவட்ட

விழுப்புரம்-விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி விலையில்லா பாட புத்தகம் மற்றும் சீருடை வழங்கினார். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., புகழேந்தி சிறப்புரையாற்றினார்.தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், கோலியனுார் சேர்மன் சச்சிதானந்தம், நகர செயலாளர் சக்கரை, துணைச் செயலாளர் புருேஷாத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கண்டாச்சிபுரம்கண்டாச்சிபுரம் ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் ஸ்ரீதேவி ரவிக்குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு, நோட்டு புத்தகங்கள் மற்றும் பேக் ஆகியவை வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம், ஊராட்சி செயலாளர் அனந்தராமன், ஒன்றிய கவுன்சிலர் மீனாகுமாரி, வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.செஞ்சிசெஞ்சியில் காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த மாணவர்கள் வரவேற்கும் நிகழ்ச்சிக்கு, முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கலைவாணி, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர்கள் சற்குணம், மூசா வரவேற்றனர். அமைச்சர் மஸ்தான் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் சீருடை, புத்தகங்களை வழங்கினார். துணை சேர்மன் ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, வட்டார கல்வி அலுவலர்கள் அக்ஸ்லியம் பெலிக்ஸ், கோவிந்தராஜன், பள்ளி ஆய்வாளர் விநாயகம், மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X