1,500 அடி உயர நந்திமலையில் தீபம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,500 அடி உயர நந்திமலையில் தீபம்

Added : நவ 16, 2021
Share
திண்டிவனம்-க்கிரவாண்டி அடுத்த சி.என்.பாளையம் நந்தி மலை கோவிலில், முதல்முறையாக 108 லிட்டர் கொண்ட கொப்பரையில் நெய் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.சி.என்.பாளையத்தில் பழமை வாய்ந்த நந்தி மலைக் கோவில், மலை மேல் 1,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை மீது இருக்கும் நந்தி பகவான் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை பார்த்தவாறு உள்ளார். ஆண்டுதோறும் கார்த்திகை தீப

திண்டிவனம்-க்கிரவாண்டி அடுத்த சி.என்.பாளையம் நந்தி மலை கோவிலில், முதல்முறையாக 108 லிட்டர் கொண்ட கொப்பரையில் நெய் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.சி.என்.பாளையத்தில் பழமை வாய்ந்த நந்தி மலைக் கோவில், மலை மேல் 1,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை மீது இருக்கும் நந்தி பகவான் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை பார்த்தவாறு உள்ளார். ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருநாளில் பக்தர்கள் வழிபடுவர்.இந்த ஆண்டு, வரும் 19ம் தேதி தீப திருவிழாவையொட்டி, அன்று மாலை 6:00 மணிக்கு, நந்தி மலை கோவிலில் முதல் முறையாக 108 லிட்டர் கொண்ட கொப்பரையில் நெய்தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.அதற்காக மூன்றை அடி உயரம், இரண்டு அடி அகலத்தில் 108 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய கொப்பரை திண்டிவனத்தில் தயார் செய்யப்பட்டது. அதனை மனி வேனில் ஏற்றி கோவிலுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. வழியில் ஏராளமான சிவனடியார்கள் கொப்பரைக்கு பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X