பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு

Added : நவ 16, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதா என கலெக்டர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கப்பட்டது. விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள்

விழுப்புரம்-விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதா என கலெக்டர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கப்பட்டது. விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதா என கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய கலெக்டர், கொரோனா பரவலைத் தடுக்க பள்ளி வளாகங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.தொடர்ந்து, சத்துணவு மையத்தை ஆய்வு செய்து, தரமான முறையில் உணவு சமைக்க அறிவுறுத்தினார். பின், மாவட்ட மாதிரி ஆதார வள மையத்தில் செயல்படும் மனநலம் குன்றிய நபர்களுக்கான வகுப்பறையை ஆய்வு செய்தார்.நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா உட்பட பலர் உடனிருந்தனர்.பொறுப்பற்ற பதில்பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்து 'வாட்ஸ் ஆப்'பில் வைரலாக பரவியது.இந்நிலையில், கொரோனா விதிமுறைப்படி பள்ளிகள் இயங்குகிறதா என ஆய்வு செய்ய கலெக்டர் மோகன் பள்ளிக்கு வந்தார்.இதையறிந்த, நகராட்சி நகர்நல அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமையிலான துப்புரவு பணியாளர்கள் அவசர அவசரமாக மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சேதமடைந்த பைப் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். இதை அங்கிருந்த நிருபர்கள் கேட்டதற்கு, மழை பெய்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும் என நகர் நல அலுவலர் பொறுப்பில்லாமல் பதில் கூறினார்.இந்த பதிலால் அங்கிருந்த பெற்றோர்கள் அதிகாரி மீது அதிருப்தியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X