பொது செய்தி

தமிழ்நாடு

' பிரச்னையா? என்னிடம் தெரிவிக்கலாம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் வார ஓய்வு வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டால் போலீசார் என்னிடம் தெரிவிக்கலாம் என எஸ்.பி., அறிவித்துள்ளார்.எஸ்.பி., ஸ்ரீநாதா செய்திக்குறிப்பு:தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை போலீசார் முதல் ஏட்டுகள் வரையில் உள்ளவர்களுக்கு ஒரு நாள் வார ஓய்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் வாராந்திர

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் வார ஓய்வு வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டால் போலீசார் என்னிடம் தெரிவிக்கலாம் என எஸ்.பி., அறிவித்துள்ளார்.எஸ்.பி., ஸ்ரீநாதா செய்திக்குறிப்பு:தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை போலீசார் முதல் ஏட்டுகள் வரையில் உள்ளவர்களுக்கு ஒரு நாள் வார ஓய்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் வாராந்திர ஓய்வில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் 9498111103 என்ற எனது எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ அல்லது என்னிடம் நேரடியாகவோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இதனை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.எஸ்.பி.,க்கள், தங்களின் உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் போலீசாருக்கு ஆஜர் அணிவகுப்பில் தெரிவிக்க வேண்டும். மேலும், போலீஸ் நிலைய தகவல் பலகையில் ஒட்டியும் தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X