கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இயற்கை சீற்றங்களில் மரணம்; இழப்பீடு நிர்ணயிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : இயற்கை சீற்றங்களினால் பொது இடங்களில் நடக்கும் விபத்துக்களுக்கு, இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்க, எட்டு வாரங்களில் வழிமுறைகள் வகுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில், பெரம்பூர் மற்றும் விருகம்பாக்கத்தில் மரம் சரிந்து விழுந்ததில், 2013ல் இருவர் இறந்தனர். மாநகராட்சியின் அலட்சியத்தால் சம்பவம் நேர்ந்ததாக, 31 லட்சம்

சென்னை : இயற்கை சீற்றங்களினால் பொது இடங்களில் நடக்கும் விபத்துக்களுக்கு, இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்க, எட்டு வாரங்களில் வழிமுறைகள் வகுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


சென்னையில், பெரம்பூர் மற்றும் விருகம்பாக்கத்தில் மரம் சரிந்து விழுந்ததில், 2013ல் இருவர் இறந்தனர். மாநகராட்சியின் அலட்சியத்தால் சம்பவம் நேர்ந்ததாக, 31 லட்சம் ரூபாய், 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.இம்மனுக்களை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.

மாநகராட்சி சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன், அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.அருண் ஆஜராகினர்.நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:பொது இடங்களில் நடக்கும் விபத்துக்களுக்கு, பொது மக்களின் தவறு காரணம் அல்ல. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது.


latest tamil news


அரசியல் மற்றும் இதர காரணங்களின் அடிப்படையில், வெவ்வேறு தொகை வழங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஒதுக்கி விட முடியாது. மக்களின் பாதுகாவலனாக இருக்கும் அரசு, கருணை தொகை, இழப்பீடு தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதை தவிர்க்க வேண்டும். இழப்பீடு வழங்குவதில் எந்த பாரபட்சமும் இருக்கக் கூடாது.

மோட்டார் வாகன விபத்து வழக்குகளில், இழப்பீடு தொகையை கணக்கிட, வழிமுறைகள் உள்ளன. வாகன விபத்துக்களை, இயற்கை சீற்றங்களால் நடக்கும் விபத்துக்களுடன் ஒப்பிட முடியாது. மரங்கள் சரிவது; மின்னல் என இயற்கை சீற்றங்களின் போது, பொது இடங்களில் நடக்கும் விபத்துக்களுக்கு, இழப்பீடு அல்லது கருணைத் தொகை வழங்க, வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

அரசு வேலையுடன் 1 கோடி ரூபாய் இழப்பீடு; 50 லட்சம் இழப்பீடு; ஐந்து லட்சம் மற்றும் ஒரு லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக, செய்திகள் வருகின்றன. எந்த அடிப்படையில் இந்த இழப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது என்பதற்கு, எந்த விளக்கமும் இல்லை. பொது இடங்களில் நடக்கும் விபத்துக்களுக்கு, எவ்வளவு இழப்பீடு பெற முடியும் என்பது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தெரிய வேண்டும்.

அதிகாரிகளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, இதர காரணங்களுக்காக நிர்ணயிப்பது போல் உள்ளது. இழப்பீட்டை நிர்ணயிக்க, அரசியல் உள்ளிட்ட காரணங்கள் இருக்கக்கூடாது. கருணைத் தொகை, இழப்பீடு, பாரபட்சமின்றி ஒரே மாதிரியாக வழங்கப்பட வேண்டும். வழிமுறைகள் இல்லாமல் இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டால், பாரபட்சத்துக்கு வழிவகுக்கும்.

எனவே, பொது இடங்களில் நடக்கும் விபத்துக்களுக்கு இழப்பீடு, கருணைத்தொகை நிர்ணயிக்க, எட்டு வாரங்களில் வழிமுறைகள் வகுக்க வேண்டும்.மனுதாரர்கள், 12 வாரங்களில் அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும். புதிய வழிமுறைகளின்படி, விண்ணப்பங்களை அரசு பரிசீலிக்க வேண்டும். அரசு தரப்பில் இழப்பீடு வழங்குவதால், தகுதியுள்ளவர்கள் காப்பீட்டு தொகை பெறுவதற்கு தடையில்லை.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
16-நவ-202108:52:31 IST Report Abuse
GMM இயற்கை சீற்ற மரணம். அரசு இழப்பீடு வழங்க சட்டம் மற்றும் விதிமுறைகள் அவசியம். சட்டம் விதி இன்றி, அரசின் பணத்தை செலவிட முடியாது. நடை முறையில் கட்சிகள் தன் விருப்பம் போல் பரிந்துரை செய்து நிவாரணம் வழங்கி வருகின்றன. தற்கொலைக்கு கூட கோடி கணக்கில் ஒரே தவணையில் அரசு நிதி கொடுக்கிறார்கள். காப்பீடு செய்தவருக்கு அரசு இழப்பீடு வழங்க முடியாது. அரசு இழப்பீட்டு மாத தவணையில் வங்கி மூலம் மட்டும் வழங்க வேண்டும். இழப்பீடு ஒரே தவணையில் மொத்தம் கொடுக்க கூடாது. இறந்தவருக்கு பிள்ளை, மனைவி மூலம் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் வருவாய் இருக்க கூடாது. வாழ்நாளில் ஒருவர் எவ்வளவு அரசு உதவி (கல்வி, மருத்துவம்) பெற்றுள்ளார் என்ற விவரம் ஒருங்கிணைந்து பாதுகாக்க வேண்டும். அரசு வேலை கருணை அடிப்படையில் கொடுத்தால் இழப்பீடு கொடுக்க கூடாது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-நவ-202107:50:13 IST Report Abuse
Lion Drsekar பாராட்டப்படவேண்டிய ஒன்று, வாக்கு வங்கியின் அடிப்படையில் அரசு வேலையும் வழங்கப்படும் நிலை உருவாகிவிட்டது, மேலும் அவர்கள் சார்ந்த அமைப்புகள் இப்போது கோடிக்கு சென்றுவிட்டனர், எல்லோருமே ஒரு இன்சூரன்வே பாலிசி எடுத்துக்கொண்டால் நல்லதுதானே, ஏழைகளின் நிலை கருதி இலவசமாகவாவது ஒரு பாலிசி அரசாங்கமே கொடுத்துவந்தால் அந்த பலனை பாதிக்கப்ப்ட்டவர்கள் பெறுவார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X