தமிழ்நாடு

தடுக்கப்படுமா?: பஸ் நிலையத்தில் குடியிருப்பு தண்ணீர் புகுவது...வடிகால் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை தேவைத

Added : நவ 16, 2021
Share
Advertisement
மிழக சாலை போக்குவரத்தின் இதயப் பகுதியாக விழுப்புரம் உள்ளது. தினசரி 1000க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும் விழுப்புரத்தில், புதுச்சேரி சாலையில் சிறிய இடத்தில் பஸ் நிலையம் இயங்கி வந்தது.இதனால், கடும் இட நெருக்கடி நிலவியது. அதனையொட்டி, கடந்த 2000ம் ஆண்டு சென்னை - திருச்சி சாலையில், 15 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டி, அப்போதைய முதல்வர் கருணாநிதி

மிழக சாலை போக்குவரத்தின் இதயப் பகுதியாக விழுப்புரம் உள்ளது. தினசரி 1000க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும் விழுப்புரத்தில், புதுச்சேரி சாலையில் சிறிய இடத்தில் பஸ் நிலையம் இயங்கி வந்தது.

இதனால், கடும் இட நெருக்கடி நிலவியது. அதனையொட்டி, கடந்த 2000ம் ஆண்டு சென்னை - திருச்சி சாலையில், 15 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டி, அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.இந்த பஸ் நிலையம் கட்டப்பட்ட நாள் முதல், இதுநாள் வரை மழைக்காலங்களில் தண்ணீர் சூழ்ந்து ஏரி போல் ஆகி விடுகிறது. இப்பிரச்னைக்கு இதுவரை விடிவுகாலம் பிறக்கவில்லை.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே சுதாகர் நகர் வழியாகச் செல்லும் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வடிகால் வாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்கால் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டதால், வாய்க்கால், இருந்த இடம் தெரியாமல் மாயமானது.

இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. தொடர்ந்து, கால்வாய் அமைக்க சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு, எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.இந்நிலையில், கடந்த வாரம் ஒரே இரவில் பெய்த மழையால், புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் சூழ்ந்தது. அப்போது, ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி, கலெக்டர் மோகன் ஆகியோர் சுதாகர் நகர் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தேங்கும் மழைநீரை அகற்றுவதற்கு பேரிடர் மேலாண்மைத் துறை நிதியில் 2 மெகா சைஸ் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ராட்சத மின் மோட்டார்கள் வைத்து, மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், புதிய பஸ் நிலையத்தில் பெய்யும் மழைநீர் மட்டும் சூழ்ந்தால் உடனடியாக அகற்றி விடலாம். அதற்கு மாறாக, புதிய பஸ் நிலையத்தையொட்டியுள்ள மற்றும் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் புகுந்து விடுகிறது.இதனால், பஸ் நிலையத்தில் தேங்கும் மழைநீரை அகற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால், மழைநீர் பஸ் நிலையத்திற்கு வருகிறது. இதைத் தடுக்க, புதிய பஸ் நிலையத்தையொட்டியுள்ள குடியிருப்புகளில் வடிகால் வாய்க்கால் அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி செய்தால், பஸ் நிலையத்தில் தேங்கும் மழைநீரை ராட்சத மின்மோட்டார்கள் மூலம் சில மணி நேரத்தில் வெளியேற்ற முடியும்.எனவே, பஸ் நிலையத்திற்குள் குடியிருப்பு பகுதி தண்ணீர் புகுவதைத் தடுக்க கலெக்டர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X