மின் இணைப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் இணைப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

Added : நவ 16, 2021
Share
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி கோட்டத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மின் வாரிய செயற்பொறியாளர் கணேசன் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி கோட்டத்தில் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2006ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, விவசாய மின் இணைப்பு வேண்டி பதிவு செய்தவர்களுக்கு தற்போது மின் இணைப்பு

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி கோட்டத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மின் வாரிய செயற்பொறியாளர் கணேசன் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி கோட்டத்தில் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2006ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, விவசாய மின் இணைப்பு வேண்டி பதிவு செய்தவர்களுக்கு தற்போது மின் இணைப்பு வழங்கப்படுகிறது.எனவே விண்ணப்பதாரர்கள் உரிய வருவாய் ஆவணங்களை 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களில் அளிக்க வேண்டும்.அதேபோல், சுயநிதி திட்டத்தின் கீழ் கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2007ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை 10 ஆயிரம் ரூபாய் திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்கள். கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2012ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை 25 ஆயிரம் ரூபாய் திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்கள்.கடந்த 2010 ஜனவரி 1ம் தேதி முதல் 2012 மார்ச் 31ம் தேதி வரை 50 ஆயிரம் ரூபாய் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு இணைப்பு வழங்க சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலர்களிடம் விண்ணப்பம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த தேதிகளில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலர்களை அணுகி தற்போதைய உரிமைச்சான்று உள்ளிட்ட வருவாய் ஆவணங்களை அளித்து மின் இணைப்பு பெற்று பயன்பெறலாம்.கூடுதல் விபரங்களுக்கு பிரிவு அலுவலர், உதவி செயற்பொறியாளர் மற்றும் செயற் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X