அபுதாபி இளவரசருடன் ஜெய்சங்கர் சந்திப்பு| Dinamalar

அபுதாபி இளவரசருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

Added : நவ 16, 2021
Share
அபுதாபி : அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் விமானப்படையின் 'ஏர் ஷோ' நேற்று முன்தினம் துவங்கியது. சவுதி அரேபியா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் விமானப் படையினரும் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில்
 அபுதாபி இளவரசருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

அபுதாபி : அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.

மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் விமானப்படையின் 'ஏர் ஷோ' நேற்று முன்தினம் துவங்கியது. சவுதி அரேபியா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் விமானப் படையினரும் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் அவர்களின் அழைப்பை ஏற்று நம் விமானப்படையும் பங்கேற்று உள்ளது.முதல்நாள் நிகழ்வில் நம் தேஜஸ் போர் விமானங்கள் பல்வேறு சாகசங்களை அரங்கேற்றின.
இதற்கிடையே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரு தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்தார்.அவர் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவ துணை தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து இரு நாடுகளின் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை:
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.அப்போது ஷேக்முகமதுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தரப்பில் வாழ்த்துகளை தெரிவித்தார்.பட்டத்து இளவரசரும் நம் பிரதமர் மற்றும் தேசத்தின் வளர்ச்சி முன்னேற்றத்திற்கு தம் உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தார். பின் இரு நாடுகளின் சகோதரத்துவம் உறவு இருதரப்பினரின் நலன் மற்றும் பல்வேறு துறைகளில் மேம்பாட்டிற்கான வழிமுறைகள் அவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இவ்வாறு அதில்கூறப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X