அரசியல் செய்தி

தமிழ்நாடு

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை தேவை: அன்புமணி

Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை : 'கிளாஸ்கோ காலநிலை மாற்ற மாநாட்டின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்' என, பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, கிளாஸ்கோ நகரில் நடந்த, 26வது ஐ.நா., காலநிலை மாற்ற மாநாட்டில்

சென்னை : 'கிளாஸ்கோ காலநிலை மாற்ற மாநாட்டின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்' என, பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, கிளாஸ்கோ நகரில் நடந்த, 26வது ஐ.நா., காலநிலை மாற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வரைவு தீர்மானத்தில், உறுதியான செயல்திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.காலநிலை மாற்றத்துக்கு காரணமான நாடுகளின் பட்டியலில், இந்தியா இல்லை; காலநிலை மாற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.

பாரிஸ் உடன்படிக்கைப்படி, புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாவிட்டால், ஏழை நாடுகள் தான் அதிகம் பாதிக்கப்படும்; பல தீவுகள் கடலில் மூழ்கிவிடும். கடல் மட்ட உயர்வால், சென்னை, கொச்சி, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட ஏழு இந்திய நகரங்கள், கடலில் மூழ்கி விடும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஆபத்துகளை உணர்ந்து, உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்திய மக்கள் அனைவரும், ஆடம்பர தேவைகளை தவிர்த்து, இயற்கையுடன் இணைந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை, மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X