பிற வேலைகளில் தான், உங்கள் கட்சி, எம்.பி.,க்கள் மும்முரமாக உள்ளனர்...| Dinamalar

பிற வேலைகளில் தான், உங்கள் கட்சி, எம்.பி.,க்கள் மும்முரமாக உள்ளனர்...

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (17)
Share
துாத்துக்குடி தொகுதி தி.மு.க., - எம்.பி., கனிமொழி அறிக்கை: கன மழை காரணமாக தாமிரபரணி நதி திறந்து விடப்படுகிறது என்பதால், மருதுார், அகரம், ஸ்ரீவைகுண்டம், ஆத்துார், முக்காணி வழியாக புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. எனவே தாமிரபரணி ஆற்றில் மீன்பிடிப்பதையும், அருகே செல்வதையும் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மக்கள் அனைவரும் பாதுகாப்புணர்வோடு இருக்க வேண்டுகிறேன்.இது
கனிமொழி, த.மா.கா., தலைவர், வாசன்

துாத்துக்குடி தொகுதி தி.மு.க., - எம்.பி., கனிமொழி அறிக்கை: கன மழை காரணமாக தாமிரபரணி நதி திறந்து விடப்படுகிறது என்பதால், மருதுார், அகரம், ஸ்ரீவைகுண்டம், ஆத்துார், முக்காணி வழியாக புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. எனவே தாமிரபரணி ஆற்றில் மீன்பிடிப்பதையும், அருகே செல்வதையும் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மக்கள் அனைவரும் பாதுகாப்புணர்வோடு இருக்க வேண்டுகிறேன்.


இது தான் உண்மையான மக்கள் பிரதிநிதியான ஒரு, எம்.பி.,யின் வேலை. ஆனால், இதைத் தவிர பிற வேலைகளில் தான், உங்கள் கட்சி, எம்.பி.,க்கள் மும்முரமாக உள்ளனர்.



விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை
: புரட்சிகரமான சமூக மாற்றத்திற்கு திரைப்படங்களும் உந்துதலாக அமையும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஜெய்பீம் என்ற திரைப்படம் அமைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மக்கள் நலனுக்காக நாங்களும் போராடி வருகிறோம்.


இந்த படம் வெளிவரும் வரை, இருளர், குறவர், வேட்டைக்காரன் போன்ற ஜாதியினர் மீதான அடக்குமுறை பலருக்கும் தெரியாது. அந்த அளவுக்குத் தான் அந்த சமுதாய மக்களுக்காக நீங்கள் பாடுபட்டு வந்தீர்களா...



புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: இட ஒதுக்கீட்டை எந்த ஜாதிகளுக்கு கொடுத்தீங்க... காட்டுமிராண்டி ஜாதி வெறியர்களாக சினிமாவில் காட்டுறோமே, அவர்களுக்கு தான் கிடைத்தது. ஓட்டு பிச்சைக்குத் தான் இட ஒதுக்கீடு உதவியுள்ளது.


இட ஒதுக்கீட்டால், உண்மையான ஏழைகளுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் பலன் கிடைக்கவில்லை என்பது உங்கள் கோபத்தால் நன்கு புலனாகிறது!



ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: தமிழகத்தில், ஹிந்தி மொழிக்கு இடம் தந்து விடக் கூடாது. தமிழை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். ஹிந்தி தான் நாட்டின் ஆட்சி மொழி என கூறிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு கண்டனத்திற்குரியது.


latest tamil news




ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் தெரியாததால், முதல்வர் ஸ்டாலின், முதல்வர்கள் மாநாடு போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் உள்ளார் என கூறப்படுகிறது. அவர் போலவே தமிழக மக்களையும் மாற்ற முயற்சிக்கிறீர்களா?



த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:
50 நாட்களுக்கு முன், 9,000 ரூபாய்க்கு விற்ற ஒரு சிப்பம் நுால், இப்போது, 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நுால் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து, ஒரு கோடி விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களை காப்பாற்ற வேண்டும்.


வறிய நிலையில் உள்ள நெசவாளர்களை காக்க, உங்களைப் போன்ற சிறிய கட்சிகளின் தலைவர்கள் தான் குரல் கொடுக்கின்றனர். ஆனால், பெரிய கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., கண்டுகொள்வதில்லையே; ஏன் என நெசவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்!


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X