பிரிடேட்டர் போர் விமானம் வாங்க ஒப்புதல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'பிரிடேட்டர்' போர் விமானம் வாங்க ஒப்புதல்

Added : நவ 16, 2021
Share
புதுடில்லி : ஏவுகணைகளை ஏந்திச் சென்று, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் 30 போர் விமானங்களை அமெரிக்காவிடம் வாங்க, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் உயர் மட்டக் குழு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆப்கன் - பாகிஸ்தான் எல்லைகளில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த, 'எம்க்யூ - 1 பிரிடேட்டர்' என்ற ஆளில்லா போர் விமானங்களை அமெரிக்கா
 'பிரிடேட்டர்' போர் விமானம் வாங்க ஒப்புதல்

புதுடில்லி : ஏவுகணைகளை ஏந்திச் சென்று, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் 30 போர் விமானங்களை அமெரிக்காவிடம் வாங்க, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் உயர் மட்டக் குழு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கன் - பாகிஸ்தான் எல்லைகளில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த, 'எம்க்யூ - 1 பிரிடேட்டர்' என்ற ஆளில்லா போர் விமானங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது.'ரிமோட்' வாயிலாக இயக்கப்படும் இந்த போர் விமானங்கள், 20 ஆயிரம் அடி உயரம் பறந்து, 1,200 கி.மீ., தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை ஏவுகணைகளால் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தவை. பல மாதங்கள் பேச்சுக்குப் பின், பிரிடேட்டர் போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க, அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.

இதையடுத்து, டில்லியில் ராணுவத் துறை செயலர் அஜய் குமார் தலைமையில் முப்படை தளபதிகள், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உயரதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், 'ஹெல்பயர்' ஏவுகணைகளுடன், 30 பிரிடேட்டர் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X