நாகேந்திரனை காப்பாற்றுங்கள் : சிங்கப்பூர் அரசுக்கு சகோதரி கோரிக்கை

Added : நவ 16, 2021
Share
Advertisement
தன்ஜங் ரம்புட்டன் : சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நாகேந்திரனை காப்பாற்றுங்கள் என அவரது சகோதரி சிங்கப்பூர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் 2009ல் சிங்கப்பூருக்கு ஹெராயின் என்ற போதை பொருள் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார்.அவருக்கு நீதிமன்றம் மரண

தன்ஜங் ரம்புட்டன் : சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நாகேந்திரனை காப்பாற்றுங்கள் என அவரது சகோதரி சிங்கப்பூர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் 2009ல் சிங்கப்பூருக்கு ஹெராயின் என்ற போதை பொருள் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார்.அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அடுத்தடுத்து நாகேந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து நாகேந்திரனுக்கு கடந்த 10ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக தண்டனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அவரது தண்டனையை குறைக்கும்படி மலேஷிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசன் லுாங்கி ஏற்க மறுத்து விட்டார்.

இந்நிலையில் மலேஷியாவில் வசிக்கும் நாகேந்திரன் சகோதரி சர்மிளா தர்மலிங்கம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாகேந்திரன் அறிவுத் திறன் குறைந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அன்பானவர். அவர் நன்கு தெரிந்து போதை மருந்தை கடத்தியிருக்க மாட்டார். சிங்கப்பூர் அரசு அவருக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க வேண்டும். நாகேந்திரனை சிங்கப்பூர் அரசு காப்பாற்றி விடும் என நம்புகிறோம். குடும்பத்தினர் அனைவரும் நாகேந்திரன் உயிர் பிழைக்க பிரார்த்தனை செய்து வருகிறோம்.நான் அதிசயங்களை நம்புகிறேன். கடவுள் கருணையால் நாகேந்திரன் மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் அதிசயம் நிகழும்.
இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X